• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நட்சத்திர ஹோட்டலில் விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை.. கடிதத்தில் எழுதியிருந்தது என்ன?

நட்சத்திர ஹோட்டலில் விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை.. கடிதத்தில் எழுதியிருந்தது என்ன?

தற்கொலை செய்துக்கொண்ட மருத்துவர்

தற்கொலை செய்துக்கொண்ட மருத்துவர்

யாரையும் துன்புறுத்த வேண்டாம் எனக் கடிதம் எழுதிவைத்து விட்டு சென்னை மருத்துவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

  • Share this:
    ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

    சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை துறையில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் மகேஸ்வர் (வயது 34). இவரது மனைவி நந்தினி அவரும் மருத்துவராக உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மருத்துவர் மகேஸ்வர் தனியாக மதுரவாயலில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் தனது காரில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார். கார் ஓட்டுநர் மருத்துவர் மகேஸ்வரனை ஹோட்டலில் இறங்கிவிட்டு சென்றுள்ளார்.

    Also Read: தமிழகத்திற்கு அதி கனமழை அலெர்ட் - இந்திய வானிலை மையம்

    இந்நிலையில் மகேஸ்வரனின் நண்பர் அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் போனை மகேஸ்வர் எடுக்கவில்லை. இதனையடுத்து அவரது கார் ஓட்டுநரை தொடர்புக்கொண்டு விவரத்தை கேட்டுள்ளார். மகேஸ்வரனை தனியார் ஓட்டலில் இறக்கி விட்டு வந்தேன். அவர் அங்கு ரூம் எடுத்து தங்கியுள்ளார் என்ற விவரத்தை கூறியுள்ளார். இதனையடுத்து கார் டிரைவரை அழைத்துக்கொண்டு மகேஸ்வர் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அவரது அறைக்கு சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இவர்கள் அழைத்தும் எந்த பதிலும் இல்லை.

    இதனையடுத்து ஓட்டல் ஊழியர்களை வரவழைத்து, மற்றொரு சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, மகேஸ்வர் படுக்கையில் அசைவின்றி கிடந்துள்ளார். அவரது அருகில், விஷ ஊசி போட்டுக்கொண்டதற்கான தடயங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தனியார் ஹோட்டலுக்கு வந்த ராயப்பேட்டை போலீசார், மகேஸ்வர் உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    Also Read: ஓடும் ரயிலில் விபரீத சாகசம்.. பள்ளி மாணவியை நேரில் அழைத்து திருவள்ளூர் எஸ்.பி அறிவுரை

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹோட்டல் அறையில் ஒரு கடிதம் இருந்துள்ளது. அந்தக் கடிதத்தில் , ‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், யாரையும் துன்புறத்த வேண்டாம் என்றும்’,  அதில் எழுதி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்னை காரணமாக மருத்துவர் தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்துள்ளது.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: