• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • BREAKING | கட்சி மீது அதிருப்தி - பாஜகவில் இன்று இணைகிறார் திமுக எம்.எல்.ஏ., கு.க செல்வம்

BREAKING | கட்சி மீது அதிருப்தி - பாஜகவில் இன்று இணைகிறார் திமுக எம்.எல்.ஏ., கு.க செல்வம்

ஸ்டாலின் உடன் கு.க செல்வம்

ஸ்டாலின் உடன் கு.க செல்வம்

சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க செல்வம் பாஜகவில் இன்று மாலை ஜே.பி நட்டா முன்னிலையில் இணைகிறார்

  • News18
  • Last Updated :
  • Share this:
திமுக சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜூன் மாதம் பத்தாம் தேதி உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து அம்மாவட்ட பொறுப்பில் வருவதற்கு அக்கட்சியினர் இவையே கடுமையான போட்டி நிலவிய சூழலில் யாரும் எதிர்பாராத வண்ணம் அம்மாவட்ட திமுகவின் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக சிற்றரசு நியமிக்கப்பட்டார்.  சீனியர்கள் பலர் இருக்கையில் சிற்றரசு நியமிக்கப்பட்டதால் கட்சியின் மூத்த நிர்வாகி சிலர் கடுமையான அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில்தான் சென்னை மேற்கு மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளரமான கு.க. செல்வம் கடுமையான அதிருப்தி அடைந்துள்ளதாகவும் இதனால் பாஜகவில் இணைவதற்காக அவர் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக தகவல் வெளியானது.





இதற்காக பாஜக மூத்த தலைவர்களிடம் பேசியபோது கடந்த இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் கூறின. இந்த நிலையில், இன்று மாலை டெல்லியில் ஜே.பி நட்டா தலைமையில் அவர் பாஜகவில் இணைய உள்ளார். இதற்காக நேற்றிரவே, அவர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: