"மெட்ரோ ரயிலில் கட்டணம் அதிகமாக இருப்பதால் கூட்டமில்லை" ஸ்டாலின் குற்றச்சாட்டு

2-வது முறையாக ஸ்டாலின் மெட்ரோ ரயிலில் பயணிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்ரோவில் ஸ்டாலின்
  • News18
  • Last Updated: July 25, 2019, 8:15 AM IST
  • Share this:
சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதாலேயே, பயணிகளின் கூட்டம் குறைவாக இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த ஸ்டாலின், விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை வரை மெட்ரோ ரயிலில் பயணித்தார். மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய போது பயணித்த அவர், தற்போது சுரங்கவழிப் பாதையில் முதல்முறையாக பயணம் செய்தார்.

மெட்ரோவில் பயணித்த ஸ்டாலின்அவருடன் திமுக எம்.எல்.ஏ. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும் பயணித்தார். ஸ்டாலினுடன் பயணிகள் உற்சாகத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், கட்டணம் அதிகமாக இருப்பதால்தான் மெட்ரோ ரயிலில் கூட்டமில்லை. மேலும் மக்கள் முக்கியமான நேரங்களிலுல் அவசர காலங்களிலும்  மட்டுமே மெட்ரோ ரயிலை  பயன்படுத்துவதாக அவர் கூறினார்.  2-வது முறையாக ஸ்டாலின் மெட்ரோ ரயிலில் பயணிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்!


Loading...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...