அப்பா இல்லாத தேர்தல் மனவருத்தத்தை அளிக்கிறது: மு.க.செல்வி வேதனை!

மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து ஆயிரம் விளக்கு பகுதியில் வீதிவீதியாக மு.க.செல்வி பிரசாரம் செய்தார்.

அப்பா இல்லாத தேர்தல் மனவருத்தத்தை அளிக்கிறது: மு.க.செல்வி வேதனை!
மு.க.செல்வி
  • News18
  • Last Updated: April 17, 2019, 3:19 PM IST
  • Share this:
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இல்லாத தேர்தல் மிகுந்த மனவருத்தமாக இருப்பதாக அவரது மகள் மு.க.செல்வி கூறியுள்ளார்.

மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து ஆயிரம் விளக்கு பகுதியில் வீதிவீதியாக மு.க.செல்வி பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தின் போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘‘வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வெற்றி பெறுவார்.


திமுக தலைவரும் எனது அப்பாவுமான கருணாநிதி இல்லாத இந்தத் தேர்தல் மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது’’ என்று கூறினார்.

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் தயாநிதி மாறன் அவர்களுக்கு ஆதரவாக மு.க.தமிழரசு ராயப்பேட்டை பகுதியில் வாக்கு சேகரித்தார்.

மத்திய சென்னைக்கு உட்பட்ட தொகுதியான ராயப்பேட்டை பகுதியில் உள்ள காலிங்கராயன் தெரு, அம்பேத்கர் நகர் குடிசை பகுதி, சைதை முத்தையா தெரு, பி எஸ் என் எல், ஜெ.ஜெ.நகர் அலுவலக குடியிருப்பு, வி.எம்.தெரு, மீர்சாகிர் பேட்டை மார்க்கெட் மக்கள் இடையே மு.க.தமிழரசு அவர்கள் வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகளை சேகரித்தார்.Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

First published: April 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading