BREAKING | திமுகவில் அன்பழகனிடம் இருந்த அதிகாரம் இனி மு.க ஸ்டாலினிடம்...!

BREAKING | திமுகவில் அன்பழகனிடம் இருந்த அதிகாரம் இனி மு.க ஸ்டாலினிடம்...!
மு.க.ஸ்டாலின்
  • News18
  • Last Updated: November 10, 2019, 1:20 PM IST
  • Share this:
திமுகவில் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளரிடம் இருந்து, தலைவரான மு.க ஸ்டாலினுக்கு மாற்றப்பட்டுள்ளது.

திமுகவின் பொதுக்குழு இன்று கூடிய நிலையில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், கட்சி விதிகளில் பல மாற்றங்களும் செய்யப்பட்டன.

இணையதளம் மூலம் உறுப்பினர் சேர்க்கை, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும் உறுப்பினர்களாகலாம், திருநங்கைகள் உறுப்பினர்களாக சேர்க்கலாம் உள்ளிட்ட விதித்திருத்தம் செய்யப்பட்டது.


மேலும், கட்சி நிர்வாகிகளை நீக்க மற்றும் சேர்க்க அதிகாரம் பொதுச்செயலாளர் ஆன அன்பழகனிடம் இருந்தது. நிர்வாகிகளை நீக்கும் உத்தரவில் அவரே கையெழுத்திடுவார்.

தற்போது அந்த அதிகாரம் தலைவரான மு.க ஸ்டாலினுக்கு மாற்றப்பட்டு விதித்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இனி, நிர்வாகிகள் நீக்கம், நடவடிக்கை ஆகிய அறிவிப்புகளில் மு.க ஸ்டாலினின் பெயர் இருக்கும்.
First published: November 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்