9-ம் தேதி தி.மு.க பொதுக்குழுக் கூட்டம்: பொதுச் செயலாளராகிறார் துரைமுருகன்

திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 9ந்தேதி நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

9-ம் தேதி தி.மு.க பொதுக்குழுக் கூட்டம்: பொதுச் செயலாளராகிறார் துரைமுருகன்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
  • Share this:
வருகின்ற ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட உள்ளார்.

திமுகவின் பொதுக்குழு கூட்டம் நாளை காலை 10 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி உயிரிழந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைவுக்குப் பிறகு புதிய பொதுச் செயலாளர் மற்றும் காலாவதியான திமுகவின் பொருளாளர் பதவிக்கு புதிய நபர்களை தேர்ந்தெடுக்கும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் திமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 4,000-க்கும் அதிகமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.


இந்தக் கூட்டத்தில் பேராசிரியர் க.அன்பழகன் வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவிக்கு திமுகவின் தற்போதைய பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

மேலும் படிக்க...உலக அளவில் 2.56 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

பொருளாளர் பதவிக்கு ஆ.ராசா, டி.ஆர்.பாலு, எ.வ.வேலு ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
First published: September 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading