சென்னையில் ஊழியர்கள் உதவியுடன் ரேஷன் பொருட்களை கடத்தி செல்லும் இளைஞர்கள்: வைரலான வீடியோ!!

ரேஷன் கடை

தண்டையார்பேட்டை ரேஷன் கடையில் விற்பனை நேரம் முடிந்த பிறகு கடையில் இருந்து உணவு பொருட்களை மூட்டை மூட்டையாக 4 இளைஞர்கள் எடுத்துச்செல்கின்றனர். 

  • Share this:
    சென்னை தண்டையார்பேட்டையில் ரேஷன் உணவு பொருட்களை  ஆட்டோவில்  கடத்தி செல்லும் வீடியோ காட்சி ஒன்று சமூக  வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    சென்னை தண்டையார்பேட்டை நாவலர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு வடசென்னை கூட்டுறவு துறை  நியாவிலைக் கடை உள்ளது. கடை எண் 051  என்ற என்னுடைய  நியாய விலைக் கடையில் 1400  குடும்ப அட்டை தாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்தவகையில், கொரோனா ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க காலை 8 மணி முதல் மதியம் 12  மணி வரை ரேஷன் பொருட்கள் விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்நிலையில், தண்டையார்பேட்டை ரேஷன் கடையில் விற்பனை நேரம் முடிந்த பிறகு கடையில் இருந்து உணவு பொருட்களை மூட்டை மூட்டையாக 4 இளைஞர்கள் எடுத்துச்செல்கின்றனர்.

    இதற்கு கடை ஊழியர்கள் சாந்தி மற்றும் சம்பத் இருவரும் உடைந்தையாக ரேஷன் பொருட்களை ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைக்கின்றனர். இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர் - அசோக்குமார்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: