• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சந்தேக புத்திக்கொண்ட கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடுமை

சந்தேக புத்திக்கொண்ட கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடுமை

சந்தியா

சந்தியா

சவுந்தர் மனைவி சந்தியாவை சென்னையில் சந்தித்து பேசியுள்ளார் அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார்.

  • Share this:
    சென்னை ராமாபுரத்தில் சேர்ந்து வாழாத மனைவியைய் கத்தியால் குத்திய கணவனை போலீஸார் கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சவுந்தர்(வயது 27), காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு சென்னை ராமாபுரத்தை சேர்ந்த சந்தியா (வயது 23) என்ற பெண்ணுக்கும் கடந்த  மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சவுந்தர் மனைவி மீது சந்தேகமடைந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன்காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. கணவரின் சந்தேக தொல்லையின் காரணமாக அவரை விட்டு பிரிந்து வாழ முடிவு செய்து ராமாபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டிக்கு சந்தியா வந்துள்ளார்.

    கடந்த ஒருவருடமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சென்னைக்கு வந்த சவுமியா பாடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு சந்தியா வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது சுந்தர் சந்தியாவை வழிமறித்து பேசியுள்ளார். சந்தியாவுடன் பேசியபடி நடந்து சென்றுள்ளார். அப்போது சந்தியாவை தன்னுடன் வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு சந்தியா மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

    Also Read: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை... பெண் உட்பட 6 பேர் சிக்கினர்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

    சாலையிலே கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆத்திரமடைந்த சவுந்தர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தியாவை வயிறு மற்றும் கழுத்து பகுதிகளில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். சந்தியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உதவிக்கு வந்தனர்.

    காயமடைந்த நிலையில் இருந்த சந்தியாவை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சந்தியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ராயலா நகர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த காவல்துறையின் தலைமறைவாக இருந்த சவுந்தரை தேடி வந்தனர். இந்நிலையில் போலீஸார் சவுந்தரை நேற்று கைது செய்தனவர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் : சோமசுந்தரம்

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: