பிஸ்கட் வியாபாரி மைனர் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசம் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பிஸ்கட் வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவொற்றியூர் வேலாயுத நகர் ஈசானிய மூர்த்தி கோவில் தெருவை சேர்ந்த அசோக் குமார். இவர் அந்தப் பகுதியில் தண்ணீர் போடும் கடை வைத்துள்ளார்.மேலும் கடையில் பலசரக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடைக்கு புதுவண்ணாரப்பேட்டை பிச்சம்மாள் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் (வயது 23 )என்ற இளைஞர் ஒரு வருடகாலமாக பிஸ்கட் போட்டு வந்துள்ளார். கடைக்கு வந்து போனதில் அசோக் குமாரின் 16 வயது மகளுடன் பிரவீன் குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் செல்போனில் பேசிப்பழகி வந்துள்ளனர். மகளின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அசோக்குமார் கண்காணித்து வந்துள்ளார். அப்போது பிரவீனுடன் செல்போனில் பேசுவதை அறிந்து கண்டித்துள்ளார். மேலும் மகளிடம் விசாரணை செய்துள்ளார். அப்போது சிறுமி அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளார்.
பிரவீன் குமார் சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி உல்லாசத்தில் ஈடுபட்டது தெரிந்தது அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி வல்லுறவு கொண்ட அசோக்கை போலீஸார் கைது செய்தனர். அவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்: அசோக் குமார்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.