• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காதலித்து ஏமாற்றம்.. இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - இளைஞர் கைது

காதலித்து ஏமாற்றம்.. இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - இளைஞர் கைது

இளைஞர் கைது

இளைஞர் கைது

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

  • Share this:
    திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

    சென்னை கொருக்குப்பேட்டை ரங்கநாதபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி( வயது31) இவர் மாதவரத்தை சேர்ந்த 28 வயது பெண்ணை  கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதன்காரணமாக இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். தனிமையில் இருக்கும் போது அந்தப்பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். காதலன் என்பதால் அந்தப்பெண்ணும் அவரது ஆசைக்கு இணங்கியுள்ளார்.

    இன்னும் எத்தனை நாள்தான் காதலர்களாகவே இருப்பது எப்போது திருமணம் செய்துக்கொள்ளலாம் என அந்தப்பெண் தீபன் சக்கரவர்த்தியிடம் கேட்டுள்ளார். திருமணப் பேச்சு எடுத்ததும் தீபன் சக்கரவர்த்தி தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்தியுள்ளார். உன்னை திருமணம் செய்துக்கொள்ள முடியாது என அந்தப்பெண்ணிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி கெஞ்சியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் அந்தப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    Also Read: இளம்பெண்ணின் கழுத்துக்குள் குத்திய 7.5 செ.மீ தையல் ஊசி.. லாவகமாக அகற்றிய கோவை மருத்துவர்கள்

    இதுகுறித்து அந்தப்பெண் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப்புகாரில் தீபன் சக்கரவர்த்தி திருமணம் செய்துக்கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இளைஞர் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    காவல்துறையினரின் விசாரணையில் அந்த இளைஞர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் இளைஞரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர்: அசோக்குமார்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: