• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

சென்னையில் அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

Youtube Video

சென்னை சின்னமலை பகுதியில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபர் சாலையில் உள்ள பள்ளம் காரணமாக நிலைதடுமாறி அரசு மாநகர பேருந்தில் மோதியதில் சம்பவ இடத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    சென்னை பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடபழனி நோக்கி செல்லும் 5E என்ற தடம் எண் கொண்ட மாநகரப் பேருந்து சின்னமலை வழியாக சென்றுள்ளது.  அப்போது அதே வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த வாலிபர் பேருந்தில் மோதியுள்ளார். அதில் விபத்து ஏற்பட்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் தலையில் பேருந்தின் பின் சக்கரம் ஏறியுள்ளது. இதனால் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    இதுகுறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இளைஞரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை எடுத்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

    முதற்கட்ட விசாரணையில் நங்கநல்லூர் சேர்ந்த முகமது யூனுஸ் என்ற ஐடி ஊழியர் விபத்தில் பலியானது தெரிய வந்துள்ளது. வேலைக்கு சென்று கொண்டிருந்த முகமது யூனுஸ் சின்னமலை பகுதி வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது, தனியார் விடுதிக்கு எதிரே சாலையில் உள்ள பள்ளத்தில் வாகனம் இறங்கியதால் நிலை தடுமாறியுள்ளார்.

    அப்போது அவரது இரு சக்கர வாகனத்திற்கு முன்பாக சென்று கொண்டிருந்த 5 E என்ற அரசு மாநகரப் பேருந்தில் பக்கவாட்டில் மோதியதால், நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

    அப்போது மாநகரப் பேருந்து இடையே சிக்கி பேருந்தின் பின் சக்கரம் தலையில் மீது ஏறிச்சென்றதால் சம்பவ இடத்தில் பலியானார். இந்த காட்சியானது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதனை அடிப்படையாக வைத்து அரசு மாநகரப் பேருந்து ஓட்டுனர் தேவராஜை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: