Home /News /tamil-nadu /

சென்னை எண்ணூரில் கோரமண்டல் உர நிறுவனம் சார்பில் பெண்கள் தின கொண்டாட்டம்..

சென்னை எண்ணூரில் கோரமண்டல் உர நிறுவனம் சார்பில் பெண்கள் தின கொண்டாட்டம்..

பெண்கள் தின கொண்டாட்டம்

பெண்கள் தின கொண்டாட்டம்

International Women's Day 2022 : கோரமண்டலின் எண்ணூர் தொழிலகத்தில் பெண் பணியாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்ச்சியில் தொழிலகத்தின் தலைவர் மற்றும் துறைகளின் தலைவர்கள் கலந்துகொண்டு இனிப்புகளையும், நினைவுப் பரிசுகளையும் வழங்கினர்.

மேலும் படிக்கவும் ...
    உலக மகளிர் தினத்தையொட்டி, முருகப்பா குழுமத்தின் ஒரு அங்கமான கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் பெண்களுக்கான நிகழ்ச்சி நடத்தியுள்ளது. பாஸ்பேட் அடிப்படையிலான உரத் தயாரிப்பு துறையில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமான கோரமண்டல் நிறுவனம், சென்னைக்கு அருகிலுள்ள எண்ணூரில் நேட்டுக்குப்பத்தில் உள்ள அரசு நடுத்தரப் பள்ளியோடு இணைந்து, இப்பகுதியில் வசிக்கும் பெண்களோடு மகளிர் தினத்தை கொண்டாடியது.

    இந்நிகழ்வின்போது வெவ்வேறு விளையாட்டுகளில் உள்ளூரைச் சேர்ந்த சுமார் 180 பெண்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர் மற்றும் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.



    மேஜிக் பஸ் என்ற அமைப்பினைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களால் மிக நேர்த்தியாக நடத்தப்பட்ட கேளிக்கையும், வேடிக்கையும் நிறைந்த பரபரப்பான விளையாட்டுகள் மகளிர் தின கொண்டாட்டத்தை உற்சாகப்படுத்தின. பள்ளி மாணவிகளின் நடனம், தற்காப்பு கலைகள் மற்றும் சாகச வளையம் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்று தங்கள்திறமைகளை வெளிப்படுத்தினர்.



    அதேபோல், கோரமண்டலின் எண்ணூர் தொழிலகத்தில் பெண் பணியாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்ச்சியில் தொழிலகத்தின் தலைவர் மற்றும் துறைகளின் தலைவர்கள் கலந்துகொண்டு இனிப்புகளையும், நினைவுப் பரிசுகளையும் வழங்கினர். கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் – ன் பொது மேலாளரும், தலைமை அலுவலருமான எஸ். ரமேஷ் பெண்களின் திறமைகளை பாராட்டி பேசினார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Chennai

    அடுத்த செய்தி