Home /News /tamil-nadu /

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான மெட்ரோ ரயிலை திறம்பட இயக்கும் பெண்கள்!

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான மெட்ரோ ரயிலை திறம்பட இயக்கும் பெண்கள்!

மெட்ரோ ரயிலை  இயக்கும் பெண்கள்

மெட்ரோ ரயிலை இயக்கும் பெண்கள்

Chennai Metro Rail : மெட்ரோ ரயில் சேவை சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில், சென்னையின் அடையாளங்களில் ஒன்றான மெட்ரோ ரயிலை பெண்கள் திறம்பட இயக்கி வருகின்றனர்.

மெட்ரோ ரயில் சேவை சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கியது. மாதம் தோறும் சராசரியாக 25 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணிக்கின்றனர். பொதுமக்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் ஒரு நம்பகமான, பாதுகாப்பான போக்குவரத்தாக உள்ளது. இச்சேவை சென்னையில் தொடங்கப்பட்ட போது  பெண் ரயில் ஓட்டுனர் இரயிலை இயக்கினார். அவர்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, ரயிலை இயக்கும் வேலைக்கு பெண்கள் பலர் வந்துள்ளனர்.

தற்போது சென்னை மெட்ரோ நிறுவனத்தில் 10 பெண் ரயில் ஓட்டுனர்கள் பணியில் உள்ளனர். ரயிலை இயக்கும் வேலை அதிக பொறுப்புடன் செய்ய வேண்டிய ஒன்று எனவும், இந்த வேலை பெருமை அளிப்பதாக கூறுகிறார் ரயில் ஓட்டுனர் அபிராம கிருத்திகா. இதுகுறித்து ரயில் ஓட்டுனர் அபிராம கிருத்திகா கூறுகையில், "எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர். பொறியியல் படிப்பு முடித்துவிட்டு ஆரம்பத்தில் இந்த வேலைக்கு வரும்போது சிறிது பயம் இருந்தது. பின்னர் பயிற்சி முடித்து தைரியமாக இந்த வேலையை செய்யத் தொடங்கினேன். மிகவும் பொறுப்புடனும், கவனமுடன் வேண்டிய வேலை. இந்த வேலையில் இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.

பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. பலர் பெருமையாகும்,  ஆச்சர்யமாகவும் வாழ்த்தவும் செய்வார்கள். செல்பி எடுத்துக் கொள்வார்கள். சிலர் சல்யூட் அடித்து செல்வார்கள். இது எளிமையான வேலைதான். அனைத்து துறைகளிலும் பெண்கள் இருக்க வேண்டும். அடுத்தடுத்த நிலைகளுக்கு சென்று சாதிக்க வேண்டுமென நினைக்கிறேன்," என்றார்.

அதேபோல், இராமநாதபுரத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஹரிபவானி, 4 ஆண்டுகளாக இந்த வேலையை செய்து வருகிறார். அவர் தன்னுடைய அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில், "மெட்ரோ ரயிலை முதலில் பெண்கள் இயக்கியதை பார்த்து, இந்த வேலைக்கு வர வேண்டும் என ஆர்வம் வந்ததாது. மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணி என்னுடையது. காவலாளியாக தன் தந்தை மிகவும் சிரமப்பட்டு என்னை படிக்க வைத்தார்.

Must Read : தொண்டர்களின் ஏக்கங்கள், முழக்கங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் - வி.கே. சசிகலா

எனவே, அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், நல்ல வேலையில் சேர்ந்து நல்ல நிலைக்கு வரவேண்டும். என் பெற்றோரைப் பார்த்து கொள்ள வேண்டும் என நான் விரும்பினேன். நான்காண்டுகளாக இந்த வேலையை செய்து வருகிறேன்.

Read More : நகை கடன் தள்ளுபடி: நிதி வழங்காததால் கூட்டுறவு சங்கங்கள் இயங்க முடியாத நிலை.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

என் பெற்றோரை இப்போது பார்த்துக் கொள்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, என்றார். பொதுமக்களிடம் இருந்து தங்களது கிடைக்கும் வரவேற்பு, இந்த வேலையை மகிழையாக தொடர உதவுவதாகவும் பெண் ரயில் ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.
Published by:Suresh V
First published:

Tags: International Women's Day, Metro Train, Women, Women Employees, Women's Day

அடுத்த செய்தி