சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் திங்கட்கிழமை காலை நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளது. இதையடுத்து ரயில் பராமரிப்பு பணிக்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு தாமபரம் ரயில் நிலையத்திற்கு வந்து உள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை ஊழியர்கள் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு பெட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து ஊழியர்கள் ரயில் பெட்டியின் உள்ளே சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத (40-வயது) மதிக்கதக்க பெண் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இதுகுறித்து தாம்பரம் ரயில்வே போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
Also Read :
வீட்டில் தனியே இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர் - தேனியில் பரபரப்பு
தகவலறிந்து சென்ற ரயில்வே போலீஸார் அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் உடலை மீட்டனர். உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப உள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தாம்பரம் ரயில்வே போலீசார் அழுகிய நிலையில் உயிரிழந்த பெண் யார், எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாம்பரம் ரயில் நிலையத்திற்கு பராமரிப்பு பணிக்காக வந்திருந்த சென்னை - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயிலில் அழுகிய நிலையில் பெண் சடலம் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : சுரேஷ், சென்னை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.