கொரட்டூரில் தாறுமாறாக ஓடிய ஆவின் ஒப்பந்த வண்டி மோதி பெண் உயிரிழப்பு...

சாலை விபத்து

கொரட்டூர் சாலையில் தாறு மாறாக ஓடிய ஆவின் ஒப்பந்த பால் வண்டி மோதி இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பெண் லாரியில் அடிபட்டு உயிரிழந்தார்.

 • Share this:
  சென்னை அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் பட்டரைவாக்கம் ஆவின் சாலையில், இருசக்கர வாகனத்தில் மனோகரன் என்பவர் மனைவி ஜான்சி ராணியுடன் அம்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அதிக வேகத்தில் வந்த ஆவின் பால் பண்ணை ஒப்பந்த வண்டி மனோகரன் ஜான்சிராணி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் நிலைதடுமாறி பின்புறம் அமைந்திருந்த ஜான்சிராணி இடது புறமாக கீழே விழுந்தார்.

  அப்போது இருசக்கரத்தில் சிக்கி தலையில் பலத்தகாயங்களுடன் உயிருக்குப் போராடி கொண்டிருந்தார்.

  இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். தகவல் அளித்து சுமார் ஒரு மணிநேரமாகியும் 108 அவசர வாகனம் வரவில்லை. அதனால் ஜான்சி ராணி அடிப்பட்ட இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் அவசர ஊர்திகள் வெகுவாக சரியான நேரத்திற்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது என்கிற குற்றச்சாட்டடினை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் முன் வைக்கின்றனர்.

  மேலும் படிக்க...  ஒரே நாளில் கணவன், மனைவி உயிரிழப்பு... இறப்பிலும் இணை பிரியாத தம்பதி...

  அதனால் ஆவின் ஒப்பந்த வண்டியை இயக்கிய தினேஷ் என்பவரை பிடித்து வழக்கு பதிவு செய்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: