சென்னையில் நான்கு சுங்கச்சாவடிகள் அகற்றப்படுகிறதா? அமைச்சர் நேரில் ஆய்வு!

கோப்புக் காட்சி

சென்னை மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. எனவே, ராஜிவ்காந்தி சாலையில் உள்ள சுங்கச்சாவடி எப்போது அகற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

 • Share this:
  சென்னை ராஜிவ்காந்தி சாலையில் உள்ள மாநகராட்சி பகுதியில் வரும் நான்கு சுங்கச்சாவடிகளில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

  சென்னை பழைய மாமல்லபுரம் சாலை, 2009ம் ஆண்டு 300 கோடி ரூபாய் செலவில், ஆறு வழி சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, ராஜிவ்காந்தி சாலை என பெயர் மாற்றப்பட்டது. இச்சாலையில், துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், சிறுசேரி ஆகிய பகுதிகளில் ஐந்து சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச் சாவடிகளில் 2009ம் ஆண்டு முதல் இதுவரை 7 முறைக்கு மேல், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிக்குள் உள்ள சுங்கச்சாவடிகளால் பொருளாதார பாதிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அவற்றை அகற்ற வேண்டும் என  பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

  மேலும் படிக்க: பிளாஸ்டிக் ஸ்டூல் மூலம் தற்காப்பு: போலீசார் சஸ்பெண்ட்...

  இவற்றை அகற்றக்கோரி கடந்தாண்டு திமுக போராட்டம் நடத்தியது. நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதேபோல், தயாநிதிமாறn அப்போதை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதினார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தி சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ராஜீவ் காந்தி சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம் சோழிங்கநல்லூரில் மேடவாக்கம் சாலை, கலைஞர் கருணாநிதி சாலை என நான்கு சுங்கச் சாவடிகளை ஆய்வு செய்தார். இந்த சாலையில் அமைந்துள்ள 4 சுங்கச் சாவடிகளும், சாலை அமைத்ததற்கான செலவு மற்றும் பராமரிப்பு செலவிற்கான மதிப்பீட்டை ஈடு செய்வதற்காக அமைக்கப்பட்டது எனவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி இந்த சுங்கச்சாவடிகளில் ஆய்வு செய்து ஆண்டு வருமானம், பணியாளர்களுக்கான மாத ஊதியம், பராமரிப்பு செலவு எவ்வளவு என கேட்டறிந்ததாகவும், இந்த சாலையின் பராமரிப்பு செலவினை மாநில அரசு ஏற்பது, சுங்கச்சாவடிகளை அகற்றுவது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார் என அமைச்சர் தெரிவித்தார்.

  ஆட்சி பொறுப்பேற்றதும் சுங்கச்சாவடிகளை அகற்றுவது குறித்து ஆலோச்சித்திருப்பது வரவேற்க கூடியது எனவும், 10 ஆண்டுகளுக்கு மேலான எங்கள் கோரிக்கையை, காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றி கொடுத்தால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

   

  இதையும் படிங்க.. சோனியா, ராகுலுடன் சந்திப்பு: சிந்துவெளி முதல் வைகை வரை புத்தகத்தை வழங்கிய ஸ்டாலின்!...

   
  Published by:Murugesh M
  First published: