• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்கச் சாவடிகளை நீக்குமா தமிழக அரசு?

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்கச் சாவடிகளை நீக்குமா தமிழக அரசு?

கோப்புக் காட்சி

கோப்புக் காட்சி

திமுக ஆட்சியில் இருந்தபோது அமைக்கப்பட்ட இந்த சுங்கச்சாவடிகளை, அகற்றக்கோரி திமுகவினர் கடந்தாண்டு போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.

  • Share this:
    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகளில் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்ற, லட்சக்கணக்கானோர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த சுங்கச்சாவடிகளால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இந்த தொகுப்பில் காணலாம்.

    சென்னை பழைய மாமல்லபுரம் சாலை, கடந்த 2009ம் ஆண்டில் 300 கோடி ரூபாய் செலவில், ஆறு வழி சாலையாக தரம் உயர்த்தப்பட்டது. ஓஎம்ஆர் என்றழைக்கப்பட்ட இந்த சாலைக்கு ராஜிவ்காந்தி சாலை என பெயரும் மாற்றப்பட்டது. துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், சிறுசேரி ஆகிய பகுதிகளில் ஐந்து சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இந்த சுங்கச் சாவடிகளில் இதுவரை 7 முறைக்கு மேல், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிப் பகுதிக்குள் உள்ள சுங்கச்சாவடிகளால் பொருளாதார பாதிப்பு மற்றும் விபத்துகள் ஏற்படுவதால் அவற்றை அகற்ற வேண்டும் என பொதுமக்களும், 108 குடியிருப்பு நல சங்கங்களைச் சேர்ந்தோரும் , பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சென்னை மாநகராட்சியில் சுங்கச்சாவடிகளை அகற்றினால் போக்குவரத்து நெரிசலும் குறையும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    சென்னைக்குள் பலமுறை பயணம் செய்ய வேண்டியிருப்பதால் சுங்கச்சாவடிகளுக்கு அதிகம் செலவாவதாகவும், ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை விழிபிதுங்க வைக்கும் நிலையில் சுங்கக்கட்டணம் கூடுதல் சுமையாக இருப்பதாகவும் பொதுமக்கள் வேதனையடைகின்றனர்.

    Also read: அதிமுகவுக்கு எதிரான அடக்குமைறயை திமுக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

    சுங்கச்சாவடியை அகற்றினால் நேரத்தை சேமிக்கலாம் எனக் கூறும் மக்கள், விதியை மீறி சுங்கச்சாவடி அமைத்து சுங்க வரி வசூலிப்பதாகவும் புகார் கூறுகின்றனர்.

    திமுக ஆட்சியில் இருந்தபோது அமைக்கப்பட்ட இந்த சுங்கச்சாவடிகளை, அகற்றக்கோரி திமுகவினர் கடந்தாண்டு போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.

    மேலும் இது குறித்து நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர், தமிழச்சி தங்கப்பாண்டியனும் கேள்வி எழுப்பினார். தயாநிதிமாறன் எம்.பியும் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதமும் எழுதினார். தேர்தல் பிரசாரத்தின்போது சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

    Also read: இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி சிறுமைப்படுத்துவதா? ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

    இந்நிலையில் பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளிலும் ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு . சுங்கச்சாவடியை நீக்குவது குறித்து விரைவில் முதல்வர் முடிவெடுப்பார் என அறிவித்தார்.

    10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள மக்களின் கோரிக்கையை புதிய அரசு காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் என்பதே லட்சக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    செய்தியாளர் - வினோத்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: