Home /News /tamil-nadu /

சிறையில் சோஃபா, ஏசியா போட்டு கொடுப்பார்கள்? ஜெயக்குமார் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!

சிறையில் சோஃபா, ஏசியா போட்டு கொடுப்பார்கள்? ஜெயக்குமார் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!

கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் பன்நோக்கு மருத்துவமனைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் பன்நோக்கு மருத்துவமனைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் பன்நோக்கு மருத்துவமனைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

சிறையில் சோஃபா, ஏசியா போட்டு கொடுப்பார்கள்? என ஜெயக்குமார் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை பட்டினம்பாக்கம் மீனவர் சமுதாய கூடத்தில் நடைபெற்று வரும் 24வது மெகா தடுப்பூசி முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி துணை ஆணையர் மனிஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், 24 மெகா தடுப்பூசி முகாமில் நடைபெற்று வருகிறது என்றும், 1.33 கோடி இரண்டாம் தவணை செலுத்திகொள்ள வேண்டியவர்களை இலக்காக வைத்து மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்றார்.

மேலும் அரசின் சார்பில் எடுக்கும் முயற்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், கொரோனா பூஜ்ஜியத்தை நோக்கி வந்தாலும் ஓரிரு மாதம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Also Read: தக்காளி கிலோ ரூ.2-க்கு விற்பனை... ரோட்டில் கொட்டி சென்ற விவசாயிகள்

83.8 சதவீதம், 15 - 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், பூஸ்டர் தடுப்பூசிக்கு தகுதியுள்ள 8.55 லட்சம் பேரில் 6.81 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறிய அமைச்சர், மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெறுவதால் மாவட்ட ஆட்சியர்கள் மாவட்டங்களில் இல்லாத சூழலில் இன்று சற்று தடுப்பூசி செலுத்தும் பணி குறைவாக உள்ளது என்றார்.

தொடர்ந்து சிறையில் தனக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டுக்கு, சிறையில் சோஃபா, ஏசியா போட்டு கொடுப்பார்கள் என்று பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், குற்றம் செய்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காக தான் தண்டனை வழங்கி சிறையில் அடைக்கப்படுகிறது என்றும், சந்தேகம் இருந்தால் ஜெயக்குமாருக்கு தெரிந்தவர்கள் இரண்டு பேரை சிறைக்கு அனுப்பி சோதனை செய்து பார்க்க சொல்லுங்கள் என்றும் விமர்சனம் செய்தார்.

அதேபோல், அடுத்த வாரத்தில் கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் பன்நோக்கு மருத்துவமனைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை மேயர் பிரியா செங்கை சிவத்தின் பேத்தி, அவர் கிறிஸ்தவரா, ஹிந்துவா என அவரின் பிறப்பு சான்றிதழ் வாங்கி பார்த்து பாஜக தெரிந்து கொள்ளட்டும் என்றார்.
Published by:Esakki Raja
First published:

Tags: DMK, Jayakumar, Ma subramanian

அடுத்த செய்தி