கணவனை கொன்று குவாரியில் வீசிய மனைவி... அதிர வைக்கும் சம்பவம்...

சென்னை மாங்காடு அருகே கணவனை மனைவியே, தனது சகோதரருடன் சேர்ந்து கொலை செய்து, கல்குவாரியில் உடலை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாங்காடு அருகே கணவனை மனைவியே, தனது சகோதரருடன் சேர்ந்து கொலை செய்து, கல்குவாரியில் உடலை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    சென்னை அடுத்த கோவூர், மேற்கு மாட வீதியைச் சேர்ந்த 37 வயதான பாஸ்கர் லாரிகளை வாடகைக்கு இயக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், பாஸ்கர், அவரது மனைவி உஷா மற்றும் பேரக்குழந்தைகளை காணவில்லை என்று 29ம் தேதி மாங்காடு போலீசில் பாஸ்கரின் தாய் மோகனாம்பாள் புகார் அளித்தார்.

    இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, ஒரு மூட்டையில் உஷா பெட்ஷீட், தலையணை உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்சென்று குளத்தில் வீசியதும், ரத்தக்காயத்துடன் பாஸ்கரை காரில் ஏற்றிச்செல்வதும் பதிவாகியுள்ளது. இதையடுத்து, சிக்கராயபுரம் கல்குவாரியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பாஸ்கரின் உடல் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

    இதையடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். இதில் பாஸ்கருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளது. அந்த சொத்தை அபகரிக்கும் நோக்கில் உஷா மற்றும் அவரது அண்ணன் பாக்கியராஜ் ஆகியோர் சேர்ந்து அவரை வீட்டிற்குள்ளேயே அடித்துக்கொலை செய்து கை, கால்களை கட்டி கல்குவாரியில் வீசி இருப்பதும் கொலையை மறைக்க ரத்தக்கறை படிந்த பெட்ஷீட் மற்றும் தலையணைகளை எடுத்து சென்று குட்டையில் வீசி விட்டு அறை முழுவதும் ரூம் ஸ்ப்ரே அடித்து விட்டு குழந்தைகளுடன் தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்தது.

    மேலும் படிக்க... உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசிய ஜெயக்குமார்

    இதையடுத்து தலைமறைவாக உள்ள பாஸ்கரின் மனைவி அவரது அண்ணன் பாக்கியராஜ் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற உஷா வீட்டில் இருந்த சொத்து ஆவணங்கள், லாரி சாவிகள், கார் சாவி, நகைகளை எடுத்துச் சென்றிருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த கொலைக்கு சொத்து பிரச்சினை காரணமா? அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்தில் மாங்காடு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: