• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன்

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 472 கோடியே 62 லட்சத்து 52 ஆயிரத்து 648 ரூபாய் வந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் இணைந்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான புதுப்பிக்கப்பட்ட  இணையதளத்தை துவக்கி வைத்தனர். அவருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் நீரஜ் மிட்டல் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஜனநாயக நாட்டில் அரசாங்கத்திற்கு முக்கிய கடமை வெளிப்படைத்தன்மை, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வரும் தொகை மற்றும் அதை அரசாங்கம் பயன்படுத்தும் நோக்கம் குறித்தும் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு முன் செயல்பட்டு வந்த இணையதளம் ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்டு, பல ஆண்டுகளாக புதுப்பிக்காமல் இருந்தது. மே 7ம் தேதிக்கு பின் வந்த நிவாரண தொகை அனைத்தையும் கொரோனா என்ற தனிப்பிரிவில் வைக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

இதுவரை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 472 கோடியே 62 லட்சத்து 52 ஆயிரத்து 648 ரூபாய் வந்துள்ளது, மக்கள் முதல்வர் மேல் உள்ள நம்பிக்கையாலும், வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதால் தான் 2 மாதத்தில் இந்த நிவாரணத்தொகை வந்துள்ளது.

Also read: ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் வலுவான தலைவரை அதிமுகவால் கொடுக்க முடியவில்லை: எஸ்.ஆர்.சேகர் விமர்சனம்

திருப்பதாகவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு அரசு நிதியில் இருந்தும் செலவிடப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு வைத்திருக்கும் பி.எம் கேர் இணையதளத்தில் எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 400 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என கூறிய அவர், இந்த ஆண்டு இ- பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளதாகவும், அரசின் அனைத்து பணிகளும் 100% இணையதளம் வாயிலாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Also read: பெண்களை இழிவாக பேசும் ஐ.லியோனி தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவரா? ஓபிஎஸ் கண்டனம்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என கூறிய அவர், இந்த ஆண்டு இ- பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளதாகவும், அரசின் அனைத்து பணிகளும் 100% இணையதளம் வாயிலாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: