Home /News /tamil-nadu /

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : விசாரணையில் சசிகலா சொன்ன பதில் என்ன?

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : விசாரணையில் சசிகலா சொன்ன பதில் என்ன?

சசிகலா

சசிகலா

Kodanad Case | கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் இன்று விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர் சொன்ன பதில் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கோடநாட்டில் (Kodanadu Estate) மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்குதாரராக இருந்த கோடநாடு எஸ்டேட்டில் கடந்த, 2017 ஏப்., 23-ந் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி, கிருஷ்ணதபா காயமடைந்தார்.

    இந்த வழக்கில் சம்மந்தப்பட்டதாக கூறப்பட்ட சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகிய 10 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் 2017 ஏப்., 28ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார்.

    இந்த வழக்கில் 103 நபர்கள் விசாரணை வளையத்துக்குள் இருந்த நிலையில் 40 நபர்களுக்கு மேல் மறு விசாரணை நடந்து முடிந்துள்ளது, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. முக்கியமாக கோடநாடு மேனேஜர் நடராஜ் , மின் உதவிபொறியாளர் மற்றும் தடயவியல் நிபுணர்களிடம் தனிப்படை போலிசார் விசாரித்து வருகின்றனர்.

    Also Read : திமுக வந்தாலே மின்வெட்டுதான்.. தலைமை மாறினாலும் நிலைமை மாறவில்லை - டிடிவி தினகரன் விமர்சனம்

    இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையை தீவிரப்படுத்துவதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    அண்மையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் 5 மணி நேரமாக விசாணை நடைபெற்றது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கியமரவான ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், ஆறுக்குட்டியிடம் ஓட்டுநராக சில காலம் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் இன்றைய விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் கோடநாடு வழக்கு தொடர்பாக சென்னை தியாகராஜநகரில் உள்ள சசிகலா வீட்டில் தென்மண்டல ஐஜி தலைமையில் 8 காவலர்கள் விசாரணை நடத்தினார்கள். அப்போது இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையிடம் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக சசிகலா தெரிவித்துள்ளார். ஜெயலலிா வாழந்த இடத்தில் கொலை, கொள்ளை நடந்தது துரதிருஷ்டவசமானது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க போலீசாருக்கு துணை நின்று சாட்சி அளிப்பேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

    கோடநாடு வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் 500 கேள்விகள் கேட்கப்பட உள்ளது. கோடநாட்டில் விலை உயர்ந்த ஆபரணங்கள், ஆவணங்கள் இருந்ததா? இப்போது அவை யார் பொறுப்பில் உள்ளது. அங்கிருக்கும் பணியாளர்கள் நியமித்தது, அவர்களின் தகவல் என பல கேள்விகளை போலீசார் கேட்டு வருகின்றனர். மேலும் தேவைப்பட்டால் நேரில் சென்று அவர்களுடன் கோடாநாட்டில் இருக்கும் பொருட்கள் குறித்தும் தகவல் தெரிவிக்க சசிகலா தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் சசிகலா கொடுக்கும் பதில்கள் மற்றும் தகவல்கள் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Sasikala

    அடுத்த செய்தி