ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் 4 சுங்கச்சாவடிகளில் டோல் கட்டணம் எவ்வளவு?

வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் 4 சுங்கச்சாவடிகளில் டோல் கட்டணம் எவ்வளவு?

Toll Gate

Toll Gate

Vandalur-Minjur Chennai Outer Ring Road : சென்னை வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சுங்க கட்டண விவரங்கள் வரும் 31.03.2022 வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இன்று முதல் வண்டலூர் மீஞ்சூர் 400 அடி வெளிவட்ட சாலையில் 4 சுங்கச்சாவடிகளில் டோல் கட்டண வசூல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. சுமார் 62 கிலோ மீட்டருக்கு 4 சுங்கச்சாவடியில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் பயணம் செய்யும் வாகனங்களுக்கான கட்டணங்கள் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

  சென்னை வண்டலூர் மீஞ்சூர் இடையேயான 62 கிலோமீட்டர் 400 அடி சென்னை புறவழிச்சாலை 4 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் வாகணங்களுக்கு டோல் கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டும்.

  தென் தமிழகம் உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து அம்பத்தூர், திருமுடிவாக்கம், திருமுல்லைவாயில் சிட்கோ, மாதவரம், மணலி, நியூடவுன் மீஞ்சூர் ஆகிய பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் செல்லவும் துறைமுகம் செல்ல சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலில் ஏற்படாமலிருக்க அமைக்கப்பட்ட இந்த 400 அடி சென்னை புறவழிச்சாலை கடந்த வருடம் தமிழக அரசு தொடங்கி வைத்த நிலையில் சுங்கக் கட்டண முறை இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

  இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சுங்க கட்டண விவரங்கள் வரும் 31.03.2022 வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

  Read More : கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

  இந்த சுங்கச்சாவடிகளில் இருசக்கர வாகனங்களுக்கு தனிவழி, சுமை லாரி, பேருந்துகளுக்கு தனி வழி, 20 டயர்கள் கொண்ட லாரிகள் செல்ல தனி பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. அவசர ஊர்திகள் மற்றும் விஐபி வாகனங்களுக்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளன.

  Must Read : சைக்கிளில் பயணம் செய்து ஊரடங்கை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு

  இந்த சுங்கச்சாவடிகளில் அமைக்கப்பட்டிருக்கும் பூத்களில் வெளியாட்கள் யாரும் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கட்டணம் வசூலித்து முடித்தவர்கள் பூத்தின் மேல் உள்ள படிகட்டுகளின் வழியே சென்று அலுவலகத்தின் வழியாக மட்டும் தான் வெளியே வர முடியும்.

  செய்தியாளர் : கன்னியப்பன், அம்பத்தூர்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Chennai, Toll gate, Toll Plaza