ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பிளீச்சிங் பவுடர் சாப்பிட்டதால் உடல் மெலிந்த குழந்தை தற்போது எப்படி உள்ளது? அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

பிளீச்சிங் பவுடர் சாப்பிட்டதால் உடல் மெலிந்த குழந்தை தற்போது எப்படி உள்ளது? அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

குழந்தையின் சிகிச்சைக்காக தென்காசியிலிருந்து சென்னை வந்த பெற்றோரை தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த சட்டமன்ற விடுதியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் தங்க வைத்துள்ளதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேலூர் கேசிரோடு வாட்டர் ஹவுஸ் கீழ்புறம் பகுதியை சேர்ந்த சீதாராஜ் (43) பிரேமா (35), இருவரும் கூலி தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு தனம் (12), இசக்கியம்மாள் (5) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களின் சிறுமி இசக்கியம்மாள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டில் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அங்கு சுத்தம் செய்ய வைத்திருந்த பிளீச்சிங் பவுடரை தின்பண்டம் என நினைத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனால் சிறுமி உணவு மற்றும் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் வலியால் துடித்துள்ளார். இதனையடுத்து சிறுமியை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதல் சிகிச்சை செய்யப்பட்டு, நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமி ஓரளவு குணமடைந்ததாக கூறி கடந்த மாதம் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

  இந்த நிலையில் மீண்டும் சிறுமி இசக்கியம்மாள் எதுவும் சாப்பிட முடியாமால் எடை குறைந்து உடம்பு மெலிந்து வந்ததால் அருகில் உள்ள செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சையில் போதிய பலன் அளிக்கவில்லை. தொடர்ந்து, சிறுமி 6 கிலோ எடையிலே இருந்தார். எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தலையீட்டு சிறுமியின் நோய்க்கான சிகிச்சை அளித்து மீட்டு தரும் படி தெரிவித்தனர்.

  இதையடுத்து, தென்காசி அரசு மருத்துவமனையிலிருந்து சென்னை எழும்பூர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தையை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

  Also read: லட்சங்களை கொடுத்து கோடிகளை சுருட்டிய கில்லாடி தம்பதி.. ஆடை விற்பனை மோசடியில் கம்பி எண்ணும் பரிதாபம்

  அப்போது அவர் கூறும்போது, தற்போது குழந்தையின் எடை 8 கிலோவாக உயர்ந்துள்ளது. குழந்தை இன்னமும் சிகிச்சையில் இருந்து வருகிறது.எனவே குழந்தையின் பெற்றோர்கள் சென்னையில் தங்க வேண்டியுள்ளது. ஏழை எளிய குடும்பமாக அவர்கள் சென்னையில் வெளியில் தங்க வசதி இல்லாததால் சேப்பாக்கத்தில் உள்ள அரசு சட்டமன்ற விடுதியில் எனக்கு ஒதுக்கப்பட்ட விடுதியில் அவர்களை தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

  குழந்தையின் சிகிச்சைக்காக தென்காசியிலிருந்து சென்னை வந்த பெற்றோரை தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த சட்டமன்ற விடுதியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் தங்க வைத்துள்ளதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Child, Ma subramanian, Treatment