திருவான்மியூர், வேளச்சேரி, பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம் போன்ற தென்
சென்னை பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் 2 நாட்கள் ( செப்டம்பர் 24,25) நிறுத்தம் செய்யப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் 25ஆம் தேதி காலை 10 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இந்த நேரத்தில் திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை போன்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக பகுதி 9 மயிலாப்பூர், மந்தைவெளி பொறியாளர் செல்போன் எண் 81449-30909, பகுதி 13 அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், திருவான்மியூர் பொறியாளர் செல்போன் எண் 81449-30913, பகுதி 14 கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி பொறியாளர் செல்போன் எண் 81449-30914, பகுதி 15 ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் பொறியாளர் செல்போன் எண் 81449-30915 தொடர்பு கொண்டு பயனடையலாம்.
Must Read : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: நடந்து சென்று நீர்நிலைகளில் ஆய்வு செய்ய உத்தரவு
இவ்வாறு சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.