சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள அரசு கலை அறிவியல் மற்றும் தொழிற்கல்வி கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் கல்லூரி முடித்துவிட்டு பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்துகொண்டிருந்த போது இரு தரப்பு மாணவிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி குடுமிப்பிடி சண்டையில் ஈடு்பட்டுள்ளனர்
அங்கிருந்த சக கல்லூரி மாணவமாணவிகள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர். கல்லூரி வளாகத்தினுள் ஏற்ப்பட்ட வாய்தகராறு பேருந்து நிறுத்தத்தில் குடுமிப்பி சண்டையாக மாறியுள்ளது. மாணவிகளின் சண்டை காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பம் தொடர்பாக தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மோதலுக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து மாணவிகளின் எதிர்காலம் குறித்து எச்சரித்து அனுப்பிவைத்துள்ளனர். இதனால் சென்னை புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.