Home /News /tamil-nadu /

Attempt Murder | உல்லாசமாக வாழ ஆசைப்பட்டு ஏசி மெக்கானிக் செய்த காரியம் - சிசிடிவி கேமராவில் சிக்கிய இளைஞர்

Attempt Murder | உல்லாசமாக வாழ ஆசைப்பட்டு ஏசி மெக்கானிக் செய்த காரியம் - சிசிடிவி கேமராவில் சிக்கிய இளைஞர்

கொலை முயற்சி வழக்கில் கைதான ஏசி மெக்கானிக்

கொலை முயற்சி வழக்கில் கைதான ஏசி மெக்கானிக்

கல்பனா வீட்டிற்கு எங்கிருந்து வந்தார் என்பதை கண்பிடிக்க அடுத்தடுத்து சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில் அந்த நபர் வேளச்சேரி சேர்ந்த தட்சணாமூர்த்தி என்பது தெரியவந்தது.

    திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டபோது கூச்சலிட்ட அரசு பேருந்து ஓட்டுநரின் மனைவி கழுத்தை அறுத்த வழக்கில் இளைஞர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சென்னை வேளச்சேரி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(40). இவர் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
    ரமேஷின் மனைவி கல்பனா(36) இரு சிறு பிள்ளைகளுடன்  கீழ் வீட்டிலும், மேல் வீட்டில் அவரது தாய், தந்தை ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த 8ம் தேதி வழக்கம்போல் பணிக்கு ரமேஷ் சென்றிருந்த நிலையில் அவரது குழந்தை படிக்கும் தனியார் பள்ளியிலிருந்து நண்பகல் செல்போனில் அழைத்தவர்கள் பிள்ளைகளை அழைத்து செல்ல யாரும் வரவில்லை என்று கூறியுள்ளனர்.

    Also Read: மெடிக்கலில் போதை மாத்திரைகள் சப்ளை.. சென்னையில் சிக்கிய ஆந்திரா கும்பல் - போலீஸார் தீவிர விசாரணை

    இதை தொடர்ந்து அவரது மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டபோது போன் எடுக்காததால் பக்கத்து வீட்டில் இருப்பவரை தொடர்பு கொண்டு வீட்டில் ரமேஷின் மனைவி உள்ளாரா என்று பார்க்கும்படி கூறியுள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் ரமேஷ் வீட்டிற்கு சென்றபோது ரமேஷின் மனைவி கல்பனா கழுத்து அறுக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் கல்பனாவை மீட்ட அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேளச்சேரி காவல் ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு சென்று கல்பனாவின் நிலையை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

    பின்னர் இச்சம்பவம் தொடர்பாக ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் கனகராஜ், அருண், மற்றும் முதல்நிலை காவலர்கள் மோகனகிருஷ்ணன், ரமேஷ், மகேஷ், சங்கர் ஆகியோர் கொண்ட தனிப்படை ஒன்றை அமைத்தனர்.  சம்பவ இடத்திற்கு சென்று தனிப்படை போலீசார் கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் யார் என்ற தகவல் கிடைக்காத நிலையில் அருகில் பொறுத்தியிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது கொலை முயற்சியில் ஈடுபட்ட நேரத்தில் அந்த பகுதியில் தனியாக ஒருவர் நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்ததை கண்டனர்.

    Also Read:  மெடிக்கல் காலேஜ் தான் டார்க்கெட்.. டைம்டேபிள் போட்டு திருடி வந்த இளைஞர் - சுவாரஸ்ய பின்னணி

    பின்னர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை கைபற்றி போலீசார் அந்த நபர் யார் என்பது குறித்தும், எதற்காக கல்பனாவை கொலை செய்ய முயற்சி செய்தார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டர். முதற்கட்டமாக தனிப்படையினர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் கல்பனாவை கொலை செய்துவிட்டதாக என்னிய அந்த நபர் போலீசாரிடம் சிக்காமல் இருக்க வீட்டிற்கு நேரடியாக செல்லாமல் கொலை நடந்த இடத்திலிருந்து பெருங்குடி ரயில் நிலையம் சென்று ரயிலில் பயணம் மேற்கொண்டு சென்னை பாரிமுனை சென்றுள்ளார்.

    பின்னர் அவரை பின்தொடர முடியாத தனிப்படை போலீசார் சிசிடிவி கேமராவை பின் தொடர ஆரம்பித்தனர். அதாவது கல்பனா வீட்டிற்கு எங்கிருந்து வந்தார் என்பதை கண்பிடிக்க அடுத்தடுத்து சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில் அந்த நபர் வேளச்சேரி கருணாம்பிகை நகரை சேர்ந்த 21-வயதான தட்சணாமூர்த்தி என்பதும் சமீபத்தில் ஏசி மெக்கானிக் உதவியாளராக வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

    Also Read: திருப்பூரில் திடீரென தீப்பிடித்த இ-பைக்... பொதுமக்கள் அலறல்

    பின்னர் தட்சணாமூர்த்தியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து தனிப்படையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது இவர் கல்பனா வீடு திறந்து இருந்ததால் உள்ளே புகுந்து பணம் மற்றும் செல்போன் திருட முயன்றபோது உறங்கிகொண்டிருந்த கல்பனா விழித்ததும் கையில் கத்தியுடன் தட்சணாமூர்த்தியை பார்த்து  திருடன் திருடன் என கூச்சலிட்டாதால் கல்பனாவை கீழே பிடித்து தள்ளி கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

    தொடர்ந்து தட்சணாமூர்த்தியிடம் நடத்திய விசாரணையில் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக பணம் மற்றும் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்ததும், ஆட்கள் இல்லாத வீட்டை மட்டும் நோட்டமிட்டு திருடுவதும், இதுவரை சென்னை பெருங்குடி, பள்ளிகாரணை, தரமணி ஐஐடி ஆகிய பகுதியில் இதுவரை மூன்று செல்போன்களை திருடியதில் 2 செல்போன்களை விற்பனை செய்த நிலையில் அவரிடமிருந்து ஒரு செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கொலை முயற்சி சம்பவம் நடைபெற்ற இடத்திற்கும் தட்சணாமூர்த்தி வீட்டிற்கும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே உள்ள நிலையில் போலீசாரிடம் சிக்காமல் இருக்க ரயில் மூலம் சென்னை பாரிமுனை சென்று பல ஊர்களை சுற்றி வீடு திரும்பியுள்ளார்.கொலை முயற்சி நடைபெற்ற இடத்திலிருந்து குற்றச்செயலில் ஈடுபட்டவரை கண்டறிய சுமார் சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் சென்று 220 சிசிடிவி கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து நான்கு நாட்களில் கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டவரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

    தட்சணாமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்த வேளச்சேரி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 220 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து நான்கு நாட்களில் குற்றச்செயலில் ஈடுபட்டவரை கைது செய்த வேளச்சேரி ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான உதவி ஆய்வாளர்கள் கனகராஜ், அருண், மற்றும் முதல்நிலை காவலர்கள் மோகனகிருஷ்ணன், ரமேஷ், மகேஷ், சங்கர் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

    செய்தியாளர்: வினோத் கண்ணன்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: CCTV Footage, Chennai, Chennai Police, Crime News, Gold Theft

    அடுத்த செய்தி