• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு

காய்கறிகள்

காய்கறிகள்

சென்னையின் முக்கிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரித்துள்ளது.

  • Share this:
    தொடர் மழை, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு பேன்ற காரணங்களால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.

    கடந்த சில வாரங்களாக காய்கறி விலை தொடர்ந்து உயர்து வந்தது. அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால் காய்கறி பயிரிடுவது தொடங்கி விளைச்சல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் காய்கறி வரத்தும் குறைந்துள்ளது.

    இந்நிலையல், சென்னையின் முக்கிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டிலும் காய்கறி விலை அதிகரித்துள்ளது. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் அப்துல்காதர் கூறுகையில், விளைச்சல் பாதிப்பு எதிரொலியாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தற்போது 30 சதவீதம் வரை காய்கறி வரத்து குறைந்திருக்கிறது. இதனால் காய்கறி விலை அதிகரித்திருக்கிறது.

    அந்தவகையில் கடந்த வாரம் ரூ.40-க்கு விற்ற ஒரு கிலோ அவரைக்காய் தற்போது ரூ.60-க்கு விற்பனை ஆகிறது. ரூ.55 வரை விற்பனையான இஞ்சி ரூ.70-க்கும், தக்காளி விலை ரூ.10 அதிகரித்து ரூ.50-க்கும் விற்பனை ஆகிறது. அதேபோல பீன்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய், பீர்க்கங்காய், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறி விலை கடந்த வாரத்தை காட்டிலும் ரூ.10 உயர்ந்திருக்கிறது.

    பாகற்காய், பச்சை மிளகாய், முள்ளங்கி, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு உள்ளிட்டவற்றின் விலை 5 ரூபாய் உயர்ந்திருக்கிறது. வரும் நாட்களில் காய்கறி வரத்து பாதிக்கப்பட்டால், காய்கறி விலை மேலும் உயரலாம். ஆனால் அழுகும் பொருட்கள் என்பதால் காய்கறி விலையை தீர்மானிக்க முடியாது என்று கூறினார்.

    கோயம்பேடு மார்க்கெட் காய்கறி விலை நிலவரம் (மொத்தவிலை, கிலோ) :

    பீன்ஸ்-ரூ.50, அவரை-ரூ.60, பாகற்காய் (பன்னீர்) -ரூ.45, பாகற்காய் (பெரியது) -ரூ.45, கத்தரிக்காய்-ரூ.40, வெண்டைக்காய்-ரூ.40, புடலங்காய்-ரூ.35, கோவைக்காய்- ரூ.30, சுரைக்காய்-ரூ.35, பீர்க்கங்காய்-ரூ.40, பச்சை மிளகாய்-ரூ.30 முதல் ரூ.35 வரை, பீட்ரூட்-ரூ.30, ஊட்டி கேரட் -ரூ.60, மாலூர் கேரட் -ரூ.55 முதல் ரூ.60 வரை, முள்ளங்கி-ரூ.30.

    முட்டைக்கோஸ்-ரூ.20, இஞ்சி-ரூ.70, சாம்பார் வெங்காயம்-ரூ.40 வரை, பல்லாரி நாசிக் வெங்காயம் -ரூ.50, ஆந்திரா பல்லாரி வெங்காயம் -ரூ.30 முதல் ரூ.35 வரை, தக்காளி-ரூ.50, சேனைக்கிழங்கு-ரூ.35, சேப்பங்கிழங்கு-ரூ.35, காலிபிளவர் (ஒன்று) -ரூ.30, முருங்கை-ரூ.40, உருளைக்கிழங்கு-ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    Must Read : இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம் (அக்டோபர் 20)

    கோயம்பேடு மார்க்கெட்டை காட்டிலும் மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் காய்கறி விலை 30 முதல் 40 சதவீதம் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: