இன்று
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தக்காளி மொத்தம் 55 வாகனத்தில் 800 டன் தக்காளி வந்துள்ளது. அதேபோல் இதர அத்தியாவசிய காய்கறிகள் மொத்தம் 5000 டன் தேவையுள்ள நிலையில் இன்று 700 டன் வரத்து குறைந்து, 3300 டன் மட்டுமே வந்துள்ள நிலையில் அதன் விலையும் நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று 1 கிலோ தக்காளி 50 முதல் 60 ரூபாய்க்கு வ்விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையில் நவீன் தக்காளி மொத்த விற்பனை 1 கிலோ ரூ.50/60 க்கும் சிறு மொத்த விற்பனை ரூ. 50/60 க்கும் செய்யப்படுகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நவீன் தக்காளி 70 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும் எனினும் அது கூடுதல் விலைக்க விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தையில் நாட்டு தக்காளி மொத்த விற்பனை 1 கிலோ 40/50 க்கும் சிறு மொத்த விற்பனை 50/60 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், சென்னை மற்றும் அதன்புறநகர் பகுதிகளில் 50 முதல் 70 ரூபாய்வரை விற்பனை செய்ய வேண்டும்.
உஜாலா கத்திரிக்காய் 1 கிலோ 90, நாட்டுத் தக்காளி கிலோ 50 க்கும்,
நவீன் தக்காளி 60 க்கும், வெங்காயம் 34, வெண்டைக்காய் 70 ரூபாய்க்கும், கேரட் ரூ.65 க்கும், அவரைக்காய் 70க்கும், பாவக்காய் 50, புடலை 40, முருங்கை 250க்கும், கருவேப்பிலை 1 கட்டு 40 ரூபாய்கும், பீர்க்கன்க்காய் 50 மற்றும் கோவைக்காய் 40 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கீரை வகைகளின் வரத்து குறைவால் ஒரு கட்டு 40 ரூபாய்க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.
Must Read : இன்றைய தலைப்புச் செய்திகள் (டிசம்பர் 13-2021)
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை நிலவரம் கிலோ 1க்கு விலைபட்டியல்:
வெங்காயம் 36/30/28
நவீன் தக்காளி 60/50
நாட்டு தக்காளி 50/40
உருளை 26/22/18
சின்ன வெங்காயம் 60/50/45
ஊட்டி கேரட் 75/70/65
பெங்களூர் கேரட் 40
பீன்ஸ் 60/40
பீட்ரூட். ஊட்டி 50/45
கர்நாடக பீட்ரூட் 35/32
சவ் சவ் 25/22
முள்ளங்கி 40/35
முட்டை கோஸ் 40/35
வெண்டைக்காய் 70/60
உஜாலா கத்திரிக்காய் 90/70
வரி கத்திரி 60/55
காராமணி 60
பாவக்காய் 50/40
புடலங்காய் 50/40
சுரக்காய் 35/25
சேனைக்கிழங்கி 17/15
முருங்ககாய் .250/170/150
சேம கிழங்கு 25/15
காலிபிளவர் 38/35
வெள்ளரிக்காய் 20/18
பச்சை மிளகாய் 50/45
பட்டாணி 40/30
இஞ்சி 45/25
பூண்டு 150/90/60
அவரைக்காய் .70/50
மஞ்சள் பூசணி 15
வெள்ளை பூசனி.15
பீர்க்கங்காய் 60/50
எலுமிச்சை 30
நூக்கள் 50
கோவைக்காய் 50/40
கொத்தவரங்காய் 60
வாழைக்காய் 6/5
வாழைதண்டு,மரம் 40
வாழைப்பூ 15
பச்சைகுடமிளகாய் 70/60
வண்ண குடமிளகாய் 200
கொத்தமல்லி 3
புதினா 3
கருவேப்பிலை 30
அனைத்து கீரை.40/35
தேங்காய் 32/30
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.