சென்னை கீழ்ப்பாக்கம் பகுதிகளில் தனியாகச் செல்லும் இளம் பெண்களைக் குறி வைத்து அவர்களிடம் பாலியல் சீண்டலில் இரண்டு நபர்கள் ஈடுபட்டு வருவதாக அடுக்கடுக்கான புகார்கள் வந்தன. குறிப்பாக நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள ஏடிஎம்க்குள் சென்ற ஒரு இளம் பெண்ணை குறிவைத்து அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளார்.
சி.சி.டி,வி காட்சிகளை பறிமுதல் செய்து காவல்துறையினர் சோதனை செய்தபோது, பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது ஒரு நபர் அல்ல, இருவர் என தெரியவந்தது. இதனையடுத்து இவர்களை பிடிப்பதற்காக கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் ரமேஷ் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். சுமார் நூற்றுக்கணக்கான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களின் செல்போன் எண்களை வைத்து அவர்களை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த இரும்பேடு பகுதியைச் சேர்ந்த கவிதாசன்(25) மற்றும் சென்னை, கொளத்தூர் சிவசக்தி நகரைச் சேர்ந்த சக்திவேல்(22) என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், போலீசார் விசாரணையில் கவிதாசனுக்கு ஏற்கனவே திருமணமாகி குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு மனைவியை தாக்கிய வழக்கிற்காக ஆரோவில் காவல் நிலைய போலிசாரால் சிறைக்கு அனுப்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக கவிதாசன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அழகான பெண்களை பார்க்கும் போது பெண்களின் மார்பகத்தில் கை வைத்தும், பின்புறத்தில் கைவைத்தும் ஆசையை தீர்த்துக் கொள்வதாகவும் போலீசார் விசாரணையில் கவிதாசன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் தனியாக இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது சிரமமாக இருப்பதால் கால்வாய் சுத்தம் செய்யும் பணியின் போது பழக்கமான கொளத்தூரை சேர்ந்த சக்திவேல் என்பவரை தனது நண்பராக்கிக் கொண்டு இருவரும் சேர்ந்து தனியாக நடந்தும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
ஜெ.ஜெ.நகர், முகப்பேர், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு போன்ற பகுதிகளை மையப்படுத்தி இவர்கள் இரவு நேரத்தில் தனியாக செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அவர்களின் மொபைல் போன் மற்றும் கைப்பையை பறித்து செல்வதும் வாடிக்கையாக கொண்டு வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.
நாளொன்றுக்கு சுமார் இரண்டிலிருந்து நான்கு பெண்கள் வரை இவர்கள் இருவரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதும், கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 100 பெண்களுக்கு மேல் இவர்கள்
பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்ததுள்ளது. குறிப்பாக நேற்று முன்தினம் ஒரேநாளில் கீழ்ப்பாக்கம் மற்றும் செனாய் நகர் பகுதிகளில் 4 பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரிய வந்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 8 செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.