சென்னை புறநகர் ரயில்களில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே இன்று முதல் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை பரவல் மிக தீவிரமாக இருந்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 6-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக சென்னை புறநகர் ரயில்களில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே இன்று முதல் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில்களில் தினசரி பயண டிக்கெட் அல்லது சீசன் டிக்கெட் பெறும் போது 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் அடையாள சான்றை காட்டினால் மட்டுமே டிக்கெட் வழங்கப்படும். ஏற்கெனவே சீசன் டிக்கெட் பெற்றவர்கள் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் அடையாள சான்றிதழை பயணத்தின் போது உடன் வைத்திருப்பது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகளால் யூடிஎஸ் செயலியில் சேவை கிடைக்காது. பயணிகளுக்கான மாதாந்திர சீசன் டிக்கெட்டில் 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் நம்பர் அச்சிடப்படும் என்றும், மாஸ்க் அணியாமல் பயணித்தால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.