பெங்களூரிலிருந்து மதுபானங்களை கடத்தி வந்து சென்னையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்த இருவர் கைது!

கள்ளச்சந்தையில் மதுவிற்பனை 2 பேர் கைது

மதுபான பாக்கெட்டுகளை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து அதிகவிலையாக 500 ரூபாய்க்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக வேளச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

 • Share this:
  பெங்களுரிலிருந்து மதுபானங்களை சென்னைக்கு கடத்தி வந்து,  கள்ளச்சந்தையில் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களிடமிருந்து, ரூ.1 லட்சம் மதிப்பிலான சுமார் 300 மதுபான பாக்கெட்டுகள் மற்றும் 51,600 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  சென்னை வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பெங்களூரிலிருந்து 180-மில்லி அளவு கொண்ட மதுபான பாக்கெட்டுகளை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து அதிகவிலையாக 500 ரூபாய்க்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக வேளச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

  அதன் அடிப்படையில் தலைமை காவலர் அச்சுதராஜ் உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  அதில், டி.என்.எச்.பி காலனி 9வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் மதுபானம் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

  இதையடுத்து, அந்த வீட்டிற்கு சென்று சோதனையிட்ட போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 180 மில்லி அளவு கொண்ட சுமார் 300 பாக்கெட் மதுபானங்களையும், 51,600 ரூபாய் ரொக்க பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

  கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் குறைந்த விலை மதுபாட்டில்களை அதிகவிலை கொடுத்து வாங்கும் சூழல் நிலவுகிறது. பல இடங்களில் அதிக பணம் கொடுத்தாலும் மதுபாட்டில்கள்  கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. இதனால்,  பல பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, தென்னை, பனை மரங்களில் கல் கட்டுவது, போன்ற சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது.

  அதேபோல், இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு பக்கத்து மாநிலமான பெங்களூருவில் இருந்து மதுபானங்களை பாக்கெட்டுகளாக வாங்கி வந்து விற்பனை செய்த கார்த்திக் ராஜா (25), மற்றும் மாஸ் கார்த்திக் (28) ஆகிய இருவரை கைது செய்து வேளச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  செய்தியாளர் - ப.வினோத்கண்ணன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: