அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை கழக அலுவலகத்தில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,
திமுக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது 150 சதவீதம் சொத்து வரியை உயர்த்தி மக்கள் மீது கடும் சுமையை சுமத்தி உள்ளனர் என்று
குற்றம் சாட்டினார்.
தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்காக போராடும் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தை மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகள் ஏன் இந்த விலைவாசி உயர்வைக் கண்டித்து போராடவில்லை என்று கேள்வி எழுப்பினார். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளை தந்து ஆட்சிக்கு வந்த திமுக ஒரு தீய சக்தி என விமர்சித்த டிடிவி தினகரன். திமுகவை எதிர்த்து தமிழக மக்களுக்காக போராடி வருகிறோம் என்று கூறினார்.
அம்பேத்கர் பிறந்த நாள் என்று சென்னை கோயம்பேட்டில் பாஜக மற்றும் விசிக மோதிக்கொண்டது காட்டுமிராண்டி தனம் என டிடிவி தினகரன் விமர்சனம் செய்தார். தற்போது வரை திமுக மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது என்றும் அது அவர்களுது ஆட்சிக்கு கூடிய விரைவில் ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.
Must Read : நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை குறிவைத்து கொள்ளை.. சேசிங் கொள்ளையர்கள் இருவர் கைது
பிரதமர் நரேந்திர மோடி குறித்து இளையராஜாவின் கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன் இளையராஜா அரசியலுக்கும் அப்பாற்பட்டவர் என்றும் அது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.