ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை புறநகர் ரயில் சேவையில் ஆண்களுக்கான நேரக் கட்டுப்பாடு நீக்கம்!

சென்னை புறநகர் ரயில் சேவையில் ஆண்களுக்கான நேரக் கட்டுப்பாடு நீக்கம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

“பிக் ஹவர்”  எனப்படும் காலை 7 மணி முதல் காலை 9 மணி வரையும் பிற்பகல் 4.30 மணி முதல் மாலை 7 மணி வரையும் ஆண்கள் பயணிக்க தடை இருந்து வந்தது. தற்போது இந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கொரோனா பரவல்  காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவையில் விதிக்கப்பட்டிருந்த நேரக் கட்டுப்பாடு முழுவதுமாக விலக்கிக்கொள்ளப்படுவதாகவும் உடனடியாக இந்த உத்தரவுக்கு அமலுக்கு வருவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  கொரோனா தொற்று காரணமாக நாடு பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கு உத்தரவை அறிவித்தன. இதன் ஒருபகுதியாக  ரயில்வே நிர்வாகமும் பல்வேறு மாநிலங்களில் புறநகர் ரயில் சேவையில் கட்டுப்பாடுகளை விதித்தன. இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதோடு, பிக் ஹவர்ஸ் எனப்படும் மக்கள் அதிகம் பயணிக்கும் நேரத்தில் பயணிப்பவர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

  அதன்படி, சென்னை புறநகர் ரயில் சேவையில் கடந்த மே 10ம் தேதி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முன்களப் பணியாளர்கள், அரசால் அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய பணிகளில் இருப்பவர்கள் அடையாள அட்டை காண்பித்து பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் மகளிர் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அனைவரும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் “பிக் ஹவர்”  எனப்படும் காலை 7 மணி முதல் காலை 9 மணி வரையும் பிற்பகல் 4.30 மணி முதல் மாலை 7 மணி வரையும் ஆண்கள் பயணிக்க தடை இருந்து வந்தது.

  இதையும் படிங்க: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் விகிதம் அதிகரிப்பு!

  தற்போது இந்த கட்டுப்பாட்டை தெற்கு ரயில்வே நீக்கியுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும்  டிக்கெட் வழங்கப்படும். ஆண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி  2 தவணை போட்டுக்கொண்ட சான்றிதழ் மற்றும் எதாவது ஒரு  அடையாள அட்டையை காண்பித்து அவர்கள் டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க: தமிழகத்தில் 4 புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

  உரிய அங்கீகாரக் கடிதம், அடையாள அட்டை மற்றும் கொரோனாதடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் ஆகியவற்றை டிக்கெட் வாங்கும்போது சமர்பிக்க தவறும் ஆண்களுக்கு (மாணவர்கள் நீங்கலாக) பீக் ஹவர்ஸில் பயணிக்க தடை தொடரும் என்றும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Chennai local Train, Corona, Southern railway