• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு: தன்னம்பிக்கையுடன் தேநீர் கடை தொடங்கிய திருநங்கைகள்!

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு: தன்னம்பிக்கையுடன் தேநீர் கடை தொடங்கிய திருநங்கைகள்!

திருநங்கைகள் தொடங்கிய தேநீர் கடை

திருநங்கைகள் தொடங்கிய தேநீர் கடை

ஆட்டோ ஓட்டுநராக இருந்த திருநங்கை வைஷ்ணவி கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக ஷேர் ஆட்டோக்கள் முறையாக இயக்கப்படாததால் வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தார்.

  • Share this:
    கொரோனா  பெருந்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டும் திருநங்கை தேனீர் மற்றும் சிற்றுண்டி கடைகளை தொடங்கியுள்ளார்.

    இந்தியாவிலேயே முதல்முறையாக கடந்த 2000ம் ஆண்டில் திருநங்கை ஒருவர் ஆட்டோ ஓட்டுனராக மாறி மக்களுக்கு பணியாற்றி வந்தார்.   கொரோனா பெருந்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக திருநங்கைகளின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. திருநங்கைகளின் வாழ்க்கை முறை ஒவ்வொரு விதமாக மாறி உள்ள சூழ்நிலையில் ஆட்டோ ஓட்டுநராக இருந்த திருநங்கை வைஷ்ணவி கடந்த இரண்டாண்டுகளாக ஷேர் ஆட்டோக்கள் முறையாக இயக்கப்படாததால் வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனையடுத்து தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில்வே நிலையம் அருகே திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ரோட்டரி கிளப் மூலம் உதவி பெற்று திருநங்கைகள் வைஷ்ணவி, ரம்யாவி ஷாகா ஆகியோர் இணைந்து தேநீர் மற்றும் சிற்றுண்டி கடைகளைத் திறந்து உள்ளனர்.

    இதையும் படிங்க: தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை.. 

    திருநங்கைகள் ஒவ்வொரு துறையிலும் பல்வேறு வகையில் வாழ்க்கை முறையை மாற்றி உள்ள நிலையில் பாதை மாறி உள்ள ஒருசில திருநங்கைகளும் வாழ்க்கையில் மாற வேண்டும் என்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநங்கைகள் தேநீர் மற்றும் சிற்றுண்டி கடை வைத்துள்ளனர். அவர்களது இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    மேலும் படிக்க: ரஜினியை அப்போதுதான் முதல்முறையாக பார்த்தேன் - சசிகலா!


    தண்டையார்பேட்டை பகுதியில் தொடங்கப்பட்ட தேநீர் கடைகளை சென்னை வடக்கு போக்குவரத்து இணை ஆணையர் லலிதா லட்சுமி, போக்குவரத்து துணை ஆணையர் பிரதீப் தொடங்கி வைத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: