போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இன்று முதல் சிக்னல்கள் செயல்படும்: சென்னை பெருநகர காவல் ஆணையர் தகவல்!

மாதிரிப் படம்

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் வெளியே செல்வது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது.

 • Last Updated :
 • Share this:
  போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இன்று முதல் அனைத்து சிக்னல்களும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில்  கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது தொற்று குறைந்து வருவதால்  நேற்று முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்வது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

  இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு அமலாக்க பணிகளில் காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வாகன தணிக்கை பணிகளையும் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஊரடங்கை பொறுத்தவரை  ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். தளர்வுகள் காரணமாக போக்குவரத்து அதிகமாகி விட்டது. அதனை குறைக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஊராடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பலரும் இ.பதிவு பெற்று அத்தியாவசிய பணிகளுக்காக சென்று வருகின்றனர். ஆகையாலே போக்குவரத்தும் அதிகரித்துள்ளது ஆகவே  மே 8ம் தேதி  (இன்று) முதல் அனைத்து சிக்னல்களும் நடைமுறை படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

  இதையும் படிங்க..முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை: ரூ.160 கோடி ஒதுக்கியது தமிழக அரசு..

  மேலும் பேசிய சங்கர் ஜிவால்,  ஆம்புலன்ஸ் போன்ற முக்கிய வாகனங்கள் எந்த விதமான சோதனைகளுமின்றி உரிய நேரத்தில் அனுப்பப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டார்.

  சேத்துபட்டு மற்றும் மண்ணடியில் ஊரடங்கு பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர்களிடம் பிரச்சனையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசாரிடம் வாகன ஓட்டிகள் தகராறு செய்யும் சம்பவங்களில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: