முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சென்னையில் நள்ளிரவு 12 மணி முதல் 5 மணி வரை வாகன போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு

சென்னையில் நள்ளிரவு 12 மணி முதல் 5 மணி வரை வாகன போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு

தமிழகத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு?

தமிழகத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு?

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய வாகன போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

  • Last Updated :

உருமாறிய ஒமைக்ரான் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக புத்தாண்டு கொண்டாட்டங்களை கட்டுப்படுத்த சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பால், காய்கறி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

பிற வாகன போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது எனவும் நாளை இரவு 12 மணிக்கு முன்பாகவே பொதுமக்கள் தங்களது பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டுமெனவும் சென்னை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை தடை விதித்துள்ளது. தங்கும் விடுதிகளுடன் கூடிய ரிசார்ட்டுகளைத் தவிர மற்ற இடங்களில் புத்தாண்டு விழாக்கள் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனினும், புத்தாண்டு தினத்தன்று கோயில்கள் மூடப்படாது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி டிசம்பர் 31ஆம் தேதியன்று இரவு உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இதர இடங்களில் புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Must Read : மின் கட்டணத்தில் ஜிஎஸ்டி இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி

இதேபோல, கோவையில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் அதிக கூட்டம் சேர்வதை தவிர்க்க கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வெளியூரிலிருந்து நகருக்குள் நுழையும் எல்லைகளில் 11 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்கள் மற்றும் வெளியாட்கள் கண்காணிக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Read More : தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம்

top videos

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கூட்டங்களுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Chennai, New Year, New Year 2022, New Year Celebration, Omicron