• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள் : வண்டலூரில் போக்குவரத்து நெரிசல்

சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள் : வண்டலூரில் போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

  • Share this:
    தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு  பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களில் இருந்து சென்னை நோக்கி படையெடுக்க தொடங்கியதால், வண்டலூரில் இருந்து பொருங்களத்தூர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகை கடந்த 4ஆம் கொண்டாடப்பட்ட நிலையில், சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பொதுமக்கள் தீபாவளி பண்டிக்கையினை கொண்டாடுவதற்காக தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

    அப்போது போக்குவரத்து நெரிசலில் ஏற்படுவதை தடுக்கும் வகையில் கனரக வாகனங்கள் மற்றும் ஆம்னி பேருந்துகள் மாற்று பாதையில் அனுப்பி வைக்கபட்டதால் பொதுமக்கள் பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் இன்றி அரசு பேருந்துகள், கார்களில் சென்றனர்.

    இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்ததாலும் பண்டிகையினை கொண்டாடி விட்டு  மீண்டும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி படையெடுக்க தொடங்கியதால் வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    Must Read : மழை வெள்ளத்தில் திணறும் வடசென்னை பகுதிகள்- அதிகாரிகள் உதவவில்லையென பொதுமக்கள் குற்றச்சாட்டு

    கொட்டும் மழை என்றும் பாராமல் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை தாம்பரத்தில் சாலையில் சென்ற காரில் திடீரென தீப்பற்றியதால், அவ்வழியாக பயணித்த வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். அடையார் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் சென்றுவிட்டு, தனது குடும்பத்துடன் காரில் திரும்பினார். தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் வந்த போது திடீரென காரின் முன் பகுதியில் புகை கிளம்பியது.

    இதையடுத்து, உடனடியாக சாலையோரம் காரை நிறுத்திவிட்டு, தனது மனைவி மற்றும் மகனுடன் கண்ணன் வெளியே வந்தார். சிறிது நேரத்தில் காரில் தீ மளமளவென எரிந்தது. தீயணைப்பு துறையினர் வருவததற்குள் கார் முற்றிலுமாக எரிந்தது. இந்த விபத்தில் சுதாரித்துக்கொண்டு உரிய நேரத்தில் காரை நிறுத்தியதால் 3 பேரும் உயிர் தப்பினர்.

     செய்தியாளர் - சுரேஷ், சென்னை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: