வியாபாரிகள் 10 நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடவேண்டும்: சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி

ககன்தீப் சிங்

பத்து நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு அனுமதி கிடையாது என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நடைபெற்ற கிருமி நாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று கோயம்பேடு மார்க்கெட் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்படும் என தெரிவித்தார். கோயம்பேடு மார்க்கெட்டில் 80 சதவீத வியாபாரிகள் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி உள்ளதாகவும் 20 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

  கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் வெளிமாநில வியாபாரிகள், சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும் இதுவரை தடுப்பூசி போடாத வியாபாரிகள் 10 நாட்களுக்குள் போட வேண்டும் எனவும் கூறினார். அப்படி போடாத வியாபாரிகளுக்கு அனுமதி கிடையாது என ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க...ஊரடங்கில் இன்று முதல் தளர்வு... காய்கறி, மளிகை கடைகள் திறப்பு  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: