Home /News /tamil-nadu /

'ஜன் ஔஷதி கடைகளில் மருந்துகள் விலை குறைவு' - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

'ஜன் ஔஷதி கடைகளில் மருந்துகள் விலை குறைவு' - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன்

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன்

பிரதான் மந்திரி ஜன் அவுஷதி யோஜனா போன்ற  "ஜென்ரிக்" மருந்துக் கடைகளில் மருந்துகளை வாங்கினால் விலை குறைவாக இருக்கும்' என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    தற்போது விலை கடுமையாக உயர்ந்துள்ள மருந்துகள் அனைத்தும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளை நாடி பயன்பெற வேண்டும். இல்லாவிட்டால், பிரதான் மந்திரி ஜன் அவுஷதி யோஜனா போன்ற  "ஜென்ரிக்" மருந்துக் கடைகளில் மருந்துகளை வாங்கினால் விலை குறைவாக இருக்கும்' என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, மருத்துவமனை முதல்வர் வனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் கண்காணிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. மலைவாழ் மக்கள் பழங்குடியினர் கூட தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு ஒத்துழைப்பு தருகிறார்கள். ஆனால், படித்து பட்டம் பெற்ற பலர் முதலாவது தடுப்பூசியை கூட செலுத்திக் கொள்ள முன் வரவில்லை. தமிழகத்தில், 1.37 கோடி பேர் இரண்டாவது தடுப்பூசியை செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். 44 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசிகளை கூட போடாமல் உள்ளனர்.

    2வது அலையில், 3 லட்சம் பேர் வரை படுக்கையில் இருந்தனர். ஆனால் இன்று கொரானா முழுவதும் குறைந்துள்ளதற்கு காரணம் தடுப்பூசிகள் தான். தற்போது, 92% என்கிற அளவில் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளனர். தடுப்பூசியால் தான் மூன்றாவது அலையில் இறப்பு இல்லாமல் இருந்தது.கொரோனோ தொற்றுகளில் வரும் உருமாறுதல்களை பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். இதுவரை தமிழகத்தில் "XE" வைரஸ் தொற்று ஏதும் இல்லை. PA2 ஒமிக்ரான் வகை தான் தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில், 29 மாவட்டங்களில் கொரோனோ பூஜ்யம் என்கிற நிலையில் உள்ளது.

    ALSO READ |  2 வது பெண் குழந்தைக்கு உதவித் தொகை பெறலாம்.. எப்படி? முழு விபரம்!

    தமிழகத்தில், 6,640 பேர் கிட்னிக்காவும், 314 பேர் கல்லீரல், 40 பேர் இதயம், 24 பேர் கைகள் போன்ற உடல் உறுப்புகளுக்காக பதிவுச் செய்து காத்திருக்கின்றனர். உடல் உறுப்புகள் தானத்தை பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரச்னை இருந்தது உண்மை.  ஆனால் தற்போது வெளிப்படையான முறையிலேயே நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கிறோம். பிறகு, தென்னிந்தா, இந்தியா என்று வழங்குகிறோம். இந்தியாவிலேயே யாருக்கும் உறுப்புகள் தேவை இல்லை என்கிறபட்சத்தில், கடைசி வாய்ப்பாக வெளி நாட்டவருக்கு உறுப்புகளை அளிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.


    மேலும் தற்போது விலை கடுமையாக உயர்ந்துள்ள மருந்துகள் அனைத்தும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளை நாடி பயன்பெற வேண்டும். இல்லாவிட்டால், ஜன் ஔஷதி (பிரதான் மந்திரி ஜன் அவுஷதி யோஜனா ) போன்ற  "ஜென்ரிக்" மருந்துக் கடைகளில் மருந்துகளை வாங்கினால் விலை குறைவாக இருக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.

    ALSO READ |  PM KISAN :விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. அந்த விஷயத்தை செய்ய மே மாதம் வரை காலக்கெடு!

    பிரதம மந்திரி மலிவு விலை மருந்து திட்டம் (Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana - PMBJP) என்பது மருந்துகளுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகளை வழங்குவதற்காக இந்திய அரசின் மருந்துகள் அமைப்பால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும்.

    பிரதம மந்திரியின் மலிவு விலை மருந்து திட்டம் கடைகளில் பொதுவான மருந்துகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது , இவை குறைந்த விலையில் கிடைக்கின்றன, ஆனால் விலையுயர்ந்த தரமிக்க மருந்துகளுக்கு இணையாக கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் : விஜயகோபால்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: PM Modi, PM Narendra Modi

    அடுத்த செய்தி