ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பட்டப்பகலிலேயே பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டுமென்றால் அமைச்சர்கள் தங்கள் முகாம்களை கலைத்துவிட்டு
சென்னைக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணாசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என எந்த தேர்தல் நடந்தாலும் வாக்காளர்களுக்கு பணம் அளித்தே வாக்குகளை பெறுகிறார்கள்.
இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பட்ட பகலிலேயே பணம் பட்டுவாடா செய்யப்படுவதோடு, பதவிகள் பகிரங்கமாக ஏலம் விடப்படுகிறது. இதனை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கான வலிமை தேர்தல் ஆணையத்திடம் உள்ளதா என்று கேட்டால் அது கேள்விக்குறி.
மேலும் படிக்க: 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு : 2,981 பேர் போட்டி இன்றி தேர்வு
அமைச்சர்கள் தங்களது பணிகளை விட்டு விட்டு உள்ளாட்சி தேர்தலில் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க மாவட்டங்களில் முகாமிட்டு இருப்பதை பார்க்கும் போது ஜனநாயகம் இல்லை என்பதை காட்டுகிறது. உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடக்க வேண்டுமெனில் அமைச்சர்கள் தங்களது முகாம்களை கலைத்து விட்டு, சென்னைக்கு வந்து பணிகளை கவனிக்க வேண்டும்.
இதையும் படிங்க: ஜி.எஸ்.டி. கவுன்சில்: பிடிஆருக்கு முக்கிய பொறுப்பு!
எவ்வளவு போராடியும் புதிய தமிழகம் கட்சிக்கு தனி சின்னம் ஒதுக்கப்படவில்லை என்றும்,தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் புதிய தமிழகம் கட்சி சார்பில் அதிகப்படியான வேட்பாளர்களை நிறுத்தி உள்ளதாகவும், வருகின்ற அக்டோபர் 1ம் தேதி முதல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன்” என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.