வரும் கல்வியாண்டிலும் ( 2022-2023 ) பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் சட்டபேரவை உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது. பொறியியல் கல்லூரிகளில் சுமார் 2 லட்சம் இடம் உள்ளது. இதில் 1,28,000 இடம் நிரம்பியுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் 71,934 இடங்கள் காலியாக இருப்பதாகவும், வரும் கல்வியாண்டிலும் ( 2022-2023 ) பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, வேலைவாய்ப்புக்கு ஏற்றவகையில் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளதாகவும், இதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Read More : தற்கொலையை தடுத்த தமிழக அரசின் இலவச பேருந்து திட்டம்.. அமைச்சர் சொன்ன தகவல்
மேலும், பெண்களுக்கென தனி கல்லூரி தொடங்குவதை விட, ஆண்கள் - பெண்கள் சேர்ந்து படிப்பதில் தவறில்லை என்றும், சுயநிதி கல்லூரிகள் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும், அனைத்து கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களின் அனுமதியுடன் தான் செயல்பட முடியும் என்றும் அமைச்சர் பொன்முடி பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Engineering, Engineering counselling, Minister Ponmudi, Tamil News, Tamilnadu, TN Assembly