தஞ்சை களிமேடு தேர் திருவிழா விபத்தில் இறந்தோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு, 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தஞ்சை தேர் விபத்து குறித்து சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானத்தின் மீது பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் அதிகாலையில் நடைப்பெற்ற தேர் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக தேர் கம்பியில் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தது அதிர்ச்சி அளிப்பதாகவும், கடந்த 26.04.2022 அன்று நடைபெற்ற திருநாவுக்கரசு சுவாமிகள் திருவிழாவின் தொடர்ச்சியாக நடைபெற்ற தேர் பவன வீதி உலாவின் போது, அருகில் இருந்த உயர்மின் அழுத்த மின் கம்பிகள் உரசியதால் தெரிகிறது என்றும் கூறினார் .
மேலும், பிரசாத், ராகவன், அன்பழகன், நாகராஜ், சந்தோஷ், செல்வம், ராஜ்குமார், சுவாமிநாதன், கோவிந்தராஜ், பரணி ஆகிய 11 பேர் உயிரிழந்துள்ளனர். துயரமான சம்பவம் நடந்துள்ளதாகவும், விபத்தில் காயமடைந்தவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அதேபோல், மாவட்ட பொறுப்பு அமைச்சரான பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என குறிப்பிட்ட அவர்,உயிரிழந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், தானும் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: தஞ்சாவூர் தேரில் மின்சாரம் பாய்ந்தது எப்படி..? 94 ஆண்டுகளில் இல்லாத கோர விபத்து பற்றி ஊர் மக்கள் கூறுவது என்ன?
தஞ்சை தேர் விபத்து குறித்த முதலமைச்சர் விளக்கம் அளித்தப்பின், உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். கேள்வி நேரத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், தஞ்சாவூர் தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உடனடியாக முதலமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ளார். அதேபோல் விபத்தில் காயமடைந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.