Home /News /tamil-nadu /

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் திருடனான ரயில்வே ஊழியர்.. திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளையில் நடந்தது என்ன

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் திருடனான ரயில்வே ஊழியர்.. திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளையில் நடந்தது என்ன

திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை வழக்கு

திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை வழக்கு

திருவான்மியூர் ரயில் நிலைய பணம் கொள்ளை போன விவகாரத்தில் காவல்துறையினர் 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

    ரயில்வே ஊழியரான டீக்காராமன்னுடன் சேர்ந்து பணம் கொள்ளை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். 

    சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டரில் நேற்று அதிகாலை பயணிகள் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். வெளிப்புறம் பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த பயணிகள் சிலர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸாரிடம் இதுகுறித்து விசாரித்துள்ளனர். இதனையடுத்து டிக்கெட் கவுண்டர் பகுதிக்கு விரைந்த போலீசார் கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு டிக்கெட் கவுண்டரில் பணியாற்றும் ஊழியர் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் வாயில் துணிகளை திணிந்த நிலையில் இருந்ததை கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

    Also Read: புதுக்கோட்டையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு - வழக்குப்பதிவில் காவல்துறையும் சேர்ப்பு

    இதனையடுத்து அவரது கை, கால் கட்டுகளை அவிழ்த்த போலீஸார் ஊழியரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது வழக்கம்போல் அதிகாலை டிக்கெட் கவுண்டரை திறக்க வந்த போது மூன்று பேர் கவுன்ட்டருக்குள் வந்து, துப்பாக்கிமுனையில் தன்னை மிரட்டி கை கால்களைக் கட்டிப்போட்டுவிட்டு டிக்கெட் கவுண்டரில் இருந்து சுமார் 1.25 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுச் சென்றதாக போலீஸாரிடம் கூறினார். பின்னர் ரயில்வே ஊழியர் டிக்காராம் புகாரளித்ததின் பேரில் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

    Also Read: ஒசூரில் ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பள்ளி மாணவி உயிரிழப்பு..

    இந்த விவகாரத்தில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீஸார் தேடி வந்தனர்.  டிக்கெட் கவுண்டரில் பணிபுரிந்து வந்த டிக்காரம் மற்றும் அவரது மனைவியிடம் சந்தேகத்தின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ரயில்வே ஊழியரான டிக்காராம் கைது செய்யப்பட்டார். டிக்கெட் கவுண்டரில் இருந்த பணத்தை  டிக்காராம் தன் மனைவியின் உதவியுடன் கொள்ளையடித்து நாடகமாடியது தெரியவந்துள்ளது.

    ரயில் நிலையத்தில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் ரயில்வே ஊழியர் அவரது மனைவியுடன் கூட்டு சேர்ந்து பணம் கொள்ளையடித்தது தெரியவந்ததையடுத்து காவல்துறையினர் ரயில்வே ஊழியர் மற்றும் அவரது மனைவி கைது செய்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரயில்வே பாதுகாப்பு படை டிஐஜி ஜெயகௌரி, திருவான்மியூர் ரயில்வே நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டரில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் புகார் பெறப்பட்ட 24 மணிநேரத்தில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    Also Read: தோழிகளின் கிண்டல்.. மனஉளைச்சலில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

    ரயில் நிலையத்தை சுற்றிலும் இருக்கக்கூடிய சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் அதிகாலை ஆட்டோவில் ஒரு பெண் ரயில் நிலையத்திற்கு வந்து சென்றது தெரிய வந்ததாகவும் மேலும் சந்தேகத்தின் பேரில் டிக்கெட் கவுண்டரில் பணியில் இருந்த ரயில்வே ஊழியரான டீக்காராம் மீனா
    என்பவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.

    தொடர்ந்த அவரது வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் திருவான்மியூர் ரயில் நிலையத்தில் காணாமல் போன செல்போன் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாகவும், ரயில்வே ஊழியரான டீக்காராமன்னுடன் சேர்ந்து பணம் கொள்ளை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும் விசாரணையில் ரயில்வே ஊழியரான டிக்காராம் மீனா ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு சுமார் 2 லட்சம் ரூபாய் வரை அவருக்கு கடன் இருப்பதாகவும் மேலும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினருடன் கடன் பெற்றும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்திருப்பது தெரியவந்துள்ளதாக கூறினார்.

    திருவான்மியூர் ரயில் நிலைய பணம் கொள்ளை போன விவகாரத்தில் காவல்துறையினர் 24 மணி நேரத்தில் குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்திருப்பதாக கூறினார். ரயில் நிலையங்களில் பெண்கள் மற்றும் முதியோருக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Online rummy, Robbery, Theft, Thiruvanmiyur

    அடுத்த செய்தி