• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் ஆல்அவுட்டைக் குடித்த 3 வயது குழந்தை உயிரிழப்பு- தனியார் மருத்துவமனை மீது குற்றம்சாட்டும் பெற்றோர்

சென்னையில் ஆல்அவுட்டைக் குடித்த 3 வயது குழந்தை உயிரிழப்பு- தனியார் மருத்துவமனை மீது குற்றம்சாட்டும் பெற்றோர்

Youtube Video

சென்னையில், கொசு விரட்டியான ஆல் அவுட்டை குடித்த 3 வயது குழந்தை இறந்த சம்பவத்தில், முதலில் சிகிச்சை அளித்த தனியார் கிளினிக் மீது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

  • Share this:
    சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், பாத்திமா நகர், வெள்ளச்சாமி தெருவை சேர்ந்தவர் தமிழரசன். 3 வயதான கிஷோர் இவரது மகன். ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கிஷோர், திடீரென அங்கிருந்த ஆல் அவுட் திரவத்தை எடுத்துக் குடித்துள்ளார்.

    அதைப் பார்த்த பெற்றோர், உடனடியாக குழந்தையை அருகில் உள்ள சாய் கிளினிக் என்ற தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு தவறான சிகிச்சையின் விளைவாக, குழந்தையின் நிலைமை மோசமாகவே, ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கும் அடுத்து, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கும் கொண்டு சென்றுள்ளனர்.

    எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி குழந்தை கிஷோர் உயிரிழந்துள்ளார். அவரது சடலத்தை அங்கிருந்து எடுத்துச் செல்வதிலும் அலைக்கழிக்கப்பட்டுள்னளர் குழந்தையின் உறவினர்கள்.

    இதற்கிடையே குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் குழந்தை சடலத்தின் உடற்கூறாய்வு முடிந்துள்ளது; சம்பந்தப்பட்ட தனியார் கிளினிக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரியுள்ளனர். இதுகுறித்து தனியார் மருத்துவமனையை அணுகிய போது மருத்துவமனை பூட்டப்பட்டிருந்தது.

    இதுபோன்ற சம்பவங்களில், உடனடியாக குழந்தைகளை சரியான சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றால், உயிரைக் காப்பாற்றி விட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். குழந்தை கிஷோர் இறப்பு தொடர்பாக, சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: