சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கடலில் குளித்துக்கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் மூன்று பேர் அலையில் சிக்கி மாயமாகினர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மே மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்துவருவதை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படவும், மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
4 மாதங்களுக்கு பிறகு மெரினா கடற்கரை திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் காரணமாக பலரும் மெரினா கடற்கரையில் குவிந்தனர். கடல் நீரில் காலை நனைத்தும் மணலில் அமர்ந்தும் பொழுதை கழித்தனர்.
இதையும் படிக்க: முகநூல் மூலம் நூதன மோசடி: ரூ. 50 ஆயிரத்தை இழந்த மதுரை நபர்!
இந்நிலையில், 12 வகுப்பு பள்ளியை நிறைவு செய்த மாணவர்கள் தர்மராஜ், விமல், சபரீநாதன் ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் மெரினா கடற்கரையில் குளிக்கச் சென்றனர். அப்போது 3 பேரும் அலையில் சிக்கி உள்ளே இழுத்து செல்லப்பட்டுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: பெரியார் பல்கலைக்கழகத்தில் இந்துத்துவா கருத்துக்கள்: திராவிடர் விடுதலை கழகம் ஆர்ப்பாட்டம்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.