• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோயம்பேடு மார்க்கெட்டில் குவிந்த காய்கறிகள்: ஆயிரம் டன் வரையில் தேக்கம்

கோயம்பேடு மார்க்கெட்டில் குவிந்த காய்கறிகள்: ஆயிரம் டன் வரையில் தேக்கம்

Youtube Video

சென்னை கோயம்பேடு சந்தையில், அத்தியாவசிய காய்கறிகளின் விலை சரிந்ததால் ஆயிரம் டன் வரையிலான காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளன. 

  • Share this:
    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்மழை பெய்து வரும் நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து 5,000 முதல் 5,500 டன் அளவிலான காய்கறிகள் தினசரி வரத்தாக உள்ளது. இதனால் கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், புடலங்காய், அவரைக்காய், பீன்ஸ், முட்டைகோஸ், பச்சைமிளகாய் உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. காய்கறிகள் அனைத்தும் கிலோ 5 ரூபாய்க்கும் கீழ் விற்பனையானதால், சுமார் ஆயிரத்து 200 டன் வரையிலான காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன.

    சிறு மொத்த விற்பனைக்கு போதுமான நேரம் இல்லாததால் காய்கறிகளை அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக கூறும் வியாபாரிகள், இதனால் விவசாயிகளுக்கு தான் அதிக இழப்பு என்றும் வேதனை தெரிவித்தனர்.

    சிறுமொத்த வியாபாரத்திற்கு காய்கறிகளை தரம் பிரித்து விற்பனை செய்வதற்கு கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டுமென கோயம்பேடு அங்காடி நிர்வாகக் குழு அதிகாரிகளிடம் வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதிகாலை நான்கு மணி முதல் காலை 10 மணி வரை அனுமதி வழங்கப்படும் நிலையில், அதனை நீட்டித்து மதியம் 3 மணிவரை அனுமதி வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பண்டிகை காலம் தொடங்க உள்ளதால், சிறுமொத்த வியாபாரத்திற்கு கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்பதே வணிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: