பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை தூக்கிலிட வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க பேரவை சார்பில் தொழிலாளர் தின விழா சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த சில தினங்களாக விசாரணை கைதிகள் மரணம் குறித்த செய்திகள் வருகிறது, காவல் துறையினர் கண்மூடித்தனமாக நடக்காமல்,
விசாரணை கைதிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அவர்களுடைய கடமை, இதுபோன்ற சம்பவங்களை காவல்துறை தவிர்க்க வேண்டும் என்றார்.
பெட்ரோல் டீசல் விலை அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ளது, மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது, இதுபோன்ற சூழலில் மாநில அரசுகள் மத்திய அரசுக்கு துணையாக இருந்து சுமைகளை குறைக்க வைக்க வேண்டும். மத்திய அரசு திமுக அரசு,கம்யூனிஸ்ட் அரசு, பிஜேபி அரசு என மாற்றான் தாய் மனப்பானையுடன் பரா்க்கவில்லை, தொடர்ந்து மக்களுக்கு தேவையானவற்றை மத்திய அரசு செய்து வருகிறதாக தெரிவித்தார்.
Read Me : என் சகோதரியை அடித்தே கொன்று தூக்கில் மாட்டியது போலீஸ் - உ.பி.யில் நடந்த பயங்கரம்
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள
மக்களுக்கு மேலும் சுமை கொடுக்கும் விதமாக
சொத்து வரி உயர்வு என்பது வாக்களித்த மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை திமுக அரசு கொடுத்துள்ளது, வாக்குறுதிகளை கொடுத்து நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது.
கடந்த சில மாதங்களாக பெண்கள் பொதுவெளியில் பாதுகாப்பற்று நடந்து செல்கின்றனர், கொள்ளை சம்பவங்கள் அதிகரித்திருப்பது வேதனைக்குரியது, அதிகரித்து வரும் பாலியல் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அரசின் கடமை, இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவர்களை தூக்கிலிட வேண்டும் என்றார்.
சொத்து வரி உயர்வு பெட்ரோல் டீசல் விலை உயர்வு என அனைத்திலும் தமிழக அரசு தன்னுடைய இயலாமையை மறைக்க மத்திய அரசை குற்றம் சொல்வது வழக்கமாகி விட்டது என தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.