Home /News /tamil-nadu /

திருவொற்றியூர் கட்டிட விபத்து: 24 குடும்பங்களை காப்பாற்றிய தனியரசை நேரில் சந்தித்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

திருவொற்றியூர் கட்டிட விபத்து: 24 குடும்பங்களை காப்பாற்றிய தனியரசை நேரில் சந்தித்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

தனியரசை நேரில் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

தனியரசை நேரில் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

திருவெற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு நேற்று இடிந்து விழுந்த விபத்தில், துரிதமாக செயல்பட்டு பெரும் சேதத்தை தவிர்க்க உதவிய திமுக பகுதி செயலாளர் தனியரசுவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

    சென்னை திருவொற்றியூர் அருகே உள்ள அரிவாக்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 1993-ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு 1998-ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டன. இதில் 24 வீடுகள் கொண்ட 14 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு சுமார் 36 குடும்பங்கள் வசித்து வருகின்றன. நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் B பிளாக்கில் உள்ள கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பிரச்னை எதுவும் பெரிதாக இல்லாததால் மக்கள் உறங்கச் சென்றுள்ளனர்.

    நேற்று காலை இதுகுறித்து அருகில் இருந்த திமுக வட்ட செயலாளர் தனியரசுவை அழைத்து வந்த அப்பகுதி மக்கள் வீடு விரிசல் விடுகிறது பாருங்கள் எனக் கூறியுள்ளனர். தனியரசு அந்தப்பகுதியை சுற்றி பார்வையிட்டுள்ளார். அப்போது லேசான சத்தத்துடன் கீழ்ப்பகுதியில் விரிசல் அதிகரிப்பதை கவனித்து வீட்டின் நிலையை உணர்ந்துள்ளார். கட்டடத்தில் யாரும் இருக்க வேண்டாம் எல்லோரும் கீழே வாருங்கள் எனக் கூறியுள்ளார்.

    மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியேறிய சில நிமிடங்களில் வீடு இடிந்து விழுந்து தரைமட்டமானது. வீடு இடிந்து விழுந்ததை கண்ட அப்பகுதி மக்கள் கலங்கிப்போயினர். மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் தங்களை காப்பாற்றியது தனியரசு என்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

    Also Read : ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 51 பேருக்கு எஸ் ஜீன் மாற்றம்!

    இந்நிலையில் தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியரசுக்கு பாராட்டு தெரிவித்தார் இந்நிகழ்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் சுதர்சனம் மற்றும் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி பி சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்

    பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம்,  1993 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட 24 குடியிருப்புகள் நேற்று இடிந்து விழுந்தது. சம்யோஜிதமாக அப்பகுதிக்கு வந்த திமுக பகுதி கழக செயலாளர் தனியரசு அக்குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டதை அறிந்து மக்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தினார், இதன் மூலம் மிகப்பெரிய உயிர் சேதம் தவிர்க்கபட்டுள்ளது.

    இது போன்று தான் திமுக தொண்டர்கள் செயல்பட வேண்டும் என முதல்வர் பாராட்டினார். நேற்று முதல்வர் அறிவித்த 1 லட்ச ரூபாய் நிவாரண தொகை அப்பகுதி மக்களுக்கு நேற்று மாலையே அளிக்கப்பட்டுவிட்டது. வீடு இழந்தவர்களுக்கு மாற்று வீடுகள் அளிக்கும் பணி மும்முறமாக நடைபெற்று வருகிறது. காலி இடங்கள் ஆய்வு செய்யபட்டு வருகிறது. அங்கு வசித்தவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வீடுகள் அளிக்கப்படும் என்றார்.

    Also Read : அரசிடம் இருந்து உத்தரவு வந்ததும் பொங்கல் பரிசு தொகுப்புகள் விநியோகிக்கப்படும்!

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தனியரசு, அப்பகுதி வாசிகள் அளித்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சென்று பார்த்தேன் விரிசல் அதிகமாக இருந்ததை அறிந்து உடனடியாக அக்குடியிருப்பில் உள்ள அனைவரையும் அப்புறப்படுத்திவிட்டேன். இதற்காக முதல்வர் என்னை அழைத்து பாராட்டினார் இதை பெருமையாக கருதுகிறேன்..
    Published by:Vijay R
    First published:

    Tags: DMK, MK Stalin, Thiruvotriyur

    அடுத்த செய்தி