முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திருவான்மியூர் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை..

திருவான்மியூர் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை..

ரயில் நிலையம்

ரயில் நிலையம்

துப்பாக்கியுடன்  கொள்ளையர்கள் வந்ததாக டிக்கெட் கவுண்டரில் பணிபுரிந்து வருபவர் போலீசில் விசாரணையில் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருவான்மியூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கொடுப்பவரை கட்டிப்போட்டு கொள்ளை நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவான்மியூர் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டரில்  மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.  ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டி கவுண்டரில் இருந்த 1 ,32 ,500 ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து சென்றதாக கூறப்படுகிறது. கொள்ளை கும்பல் கவுண்டரில் இருந்தவர்களை அறையில் அடைத்து பூட்டு போட்டு விட்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கியுடன்  கொள்ளையர்கள் வந்ததாக டிக்கெட் கவுண்டரில் பணிபுரிந்து வரும் டீக்காராம் மீனா போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். உண்மையிலேயே கொள்ளையர்கள் துப்பாக்கி வைத்து இருந்தார்களா என சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Crime News, Thiruvanmiyur