Home /News /tamil-nadu /

தாலிக்கு தங்கம் திட்டத்தை கைவிடாமல் உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் - திருமாவளவன்

தாலிக்கு தங்கம் திட்டத்தை கைவிடாமல் உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் - திருமாவளவன்

திருமாவளவன்

திருமாவளவன்

பாஜக இந்திய அளவில் அரசியல் ஆதாயத்திற்காக சாதிய அளவில் பிளவுகளை ஏற்படுத்துகிறது. சாதி உணர்வுகளை திட்டமிட்டு பரப்புகிறார்கள். ஜாதியை பின்னுக்கு தள்ளி பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருப்பது தமிழகம் தான் என்றார்.

  • News18
  • Last Updated :
தாலிக்கு தங்கம் திட்டத்தை கைவிடாமல் உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்தையும் சேர்த்து அளிக்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் ஸ்டுடியோ ஒருங்கிணைக்கும் சமூக நீதிக்கான கலைத்திருவிழா மற்றும் எழுச்சித் தமிழர் விருது வழங்கும் விழா ஆகஸ்ட் 17 அன்று நடைபெற இருக்கிறது.

இதற்காக ஆர்வம் உள்ளவர்கள் குறும்படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் அனிமேஷன் படங்கள் தயாரித்து ஜூலை 1ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னை சேப்பாகத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  திருமாவளவன், இந்திய அரசியல் கலை துறையோடு பிணைக்கப்பட்ட ஒன்று. அண்ணா தொடங்கி ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்றவர்கள் கலைத் துறையை சார்ந்தவர்கள்.

சமூக நீதி பார்வை அனைவருக்குமானது. புதிய தலைமுறையினர் சமூக நீதி பார்வை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற இந்த முயற்சி வரவேற்க தக்கது.

பாஜக இந்திய அளவில் அரசியல் ஆதாயத்திற்காக சாதிய அளவில் பிளவுகளை ஏற்படுத்துகிறது. சாதி உணர்வுகளை திட்டமிட்டு பரப்புகிறார்கள். ஜாதியை பின்னுக்கு தள்ளி பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருப்பது தமிழகம் தான் என்றார்.

Also read... 2014-ம் ஆண்டில் தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று வரவாற்றை மாற்றி எழுதினாலும் எழுதுவார்கள் - ப.சிதம்பரம்

அதனால் தான் அவர்களால் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியவில்லை. அதனால் தான் அவர்கள் தற்போது தமிழ்நாட்டின் பக்கம் திரும்பி உள்ளன்ர்.

பாஜகவினர் தமிழ்நாட்டை சூறையாட பார்க்கிறார்கள். ஜாதிய மதவாத அரசியலை கிராமம் தோறும் கொண்டு சேர்கிறார்கள் என்றார். தொடர்ந்து பேசிய அவர் இது மிகவும் ஆபத்தானது. எனவே தமிழ்நாட்டை காப்பாற்றும் குழலில் நாம் உள்ளோம். சமூக நீதி அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

திருமண உதவி திட்டத்தினை கைவிட வேண்டாம். மூவலூர் மூதாட்டி பெயரில் வழங்கப்பட அந்த திட்டம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். அதோடு சேர்த்து உயர்கல்வி நிதி உதவியை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Thol. Thirumavalavan

அடுத்த செய்தி